யானைத் தந்தம் கொண்ட ஒருவர் கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு இனைந்து இன்று (2020 மே 18) கதிர்காமம் கோதமிகம பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது வீட்டொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த யானைத் தந்தத்துடன் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் அம்பலண்தோட்டை பொலிஸ் சிறப்பு பணிக்குழுவுடன் இணைந்து கதிர்காமம் கோதமிகம பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு நடவடிக்கையின் போது அப்பகுதியில் உள்ள வீட்டொன்றில் சுமார் 2 அடி உயரமுள்ள ஒரு யானைத் தந்தம் கண்டுபிடிக்கப்பட்டதுடன் வீட்டில் இருந்த ஒரு நபர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.

இவ்வாரு கைது செய்யப்பட்ட 29 வயதான குறித்த சந்தேகநபர் அப்பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார், சந்தேக நபருடன் மீட்கப்பட்ட யானைத் தந்தமும் மேலதிக விசாரணைகளுக்காக கதிர்காமம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.