மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களுடன் மூன்று நபர்கள் (03) கடற்படையால் கைது

குச்சவேலி பல்லவகுளம் பகுதியில் 2020 மே 19 ஆம் திகதி மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற வெடிபொருட்களுடன் முன்று சந்தேக நபர்கள் கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

வெடிபொருட்கள் பயன்படுத்தி மீன்பிடித்தல் மூலம் கடல் சுற்றுச்சூழல் கடுமையாக சேதமடைகிறது, மேலும் அதைத் தடுக்க கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, 2020 மே 19 ஆம் திகதி கிழக்கு கடற்படைத் தளத்துடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழு குச்சவேலி பல்லவகுளம் பகுதியில் நடத்திய இதேபோன்ற சோதனை நடவடிக்கையின் போது, இரண்டு (02) மோட்டார் சைக்கிள்கள் சோதனை செய்யப்பட்டன. அப்போது மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர்களிடம் இருந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்ற 24 நிர் ஜெல் குச்சிகள், 176 மின்சார அல்லாத டெட்டனேட்டர்கள், 24 பாதுகாப்பு உருகிகள் (ஒவ்வொன்றும் சுமார் 12 அங்குலங்கள்), மற்றும் எட்டு அடி நீள பாதுகாப்பு உருகியொன்று கண்டுபிடிக்கப்பட்டன. அதன்படி, மோட்டார் சைக்கிள்களில் இருந்த 03 சந்தேக நபர்கள், வெடிபொருட்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாரு கைது செய்யப்பட்ட 21 முதல் 43 வயதுடைய சந்தேக நபர்கள் திருகோணமலையில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் வெடிபொருள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுடன் குச்சவேலி பொலிஸாரிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டனர்.