வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் காலி வக்வெல்ல பாலத்தில் சிக்கி இருந்த குப்பைகளை அகற்ற கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது

காலி வக்வெல்ல பாலத்தில் சிக்கிக்கிடந்த குப்பைகள் மற்றும் மரத்துண்டுகள் வெள்ளம் ஏற்படுவதற்கு முன்னர் 2020 மே 21 ஆம் திகதி கடற்படையினரால் அகற்றப்பட்டன.

நிலவும் மழைக்காலம் காரணமாக கின் ஆற்றில் நீர்மட்டம் அதிகரிதுள்ளது. அதன்படி, தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் கச்சப போலின் அறிவுறுத்தல்களின் கீழ் 2020 மே 21 ஆம் திகதி கின் ஆற்றின் குறுக்கே உள்ள வக்வெல்ல பாலத்தில் சிக்கி இருந்த மூங்கில் புதர்கள் உட்பட கழிவுகள் அகற்றும் பணிகள் தென் கடற்படை கட்டளையின் சுழியோடி பிரிவின் வீரர்களினால் மேற்கொள்ளப்பட்டதுடன் அங்கு நீர் சீராக ஓட மிகுந்த முயற்சியுடன் கழிவுகளை அப்புறப்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இது தவிர, வெள்ளம் ஏற்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்க கடற்படை நிவாரண மற்றும் மீட்பு குழுக்கள் ஏற்கனவே நிறுத்தப்பட்டுள்ளன. உடனடி பதில், மீட்பு மற்றும் நிவாரண பிரிவு (4RU) மற்றும் சிறப்பு படகு படை பிரிவுகளின் பல கடற்படை வீர்ர்களும் இந்த நிவாரணத் நடவடிக்கைகளுக்காக கடற்படையால் நியமிக்கப்பட்டனர்.