கேரள கஞ்சா கொண்ட ஒரு நபர் (01) கடற்படை உதவியுடன் கைது

கடற்படை மற்றும் தங்காலை கலால் அலுவலகம் இணைந்து 2020 மே 21 ஆம் திகதி பெலியத்த நகர பகுதியில் மேற்கொண்டுள்ள ஒருங்கிணைந்த சோதனை நடவடிக்கையின் போது கேரள கஞ்சா கொண்ட ஒரு நபர் (01) கைது செய்யப்பட்டார்.

நாட்டில் நிலவும் சூழ்நிலை இருந்தபோதிலும், போதைப்பொருட்களை அகற்றும் தேசிய பணியில் இலங்கை கடற்படை தொடர்ந்து முக்கிய பங்களிப்பாளராக உள்ளது. அதன்படி, தெற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள், தங்காலை கலால் அலுவலகத்துடன் இணைந்து, இந்த நடவடிக்கையை பெலியத்த பகுதியில் 2020 மே 21 அன்று நடத்தினர். இந்த ஒருங்கிணைந்த நடவடிக்கையில் சுமார் 200 கிராம் கேரள கஞ்சா சந்தேகத்திற்கிடமான நபரின் வசம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட நபர் பெலியத்த பகுதியில் வசிக்கும் 27 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து தங்காலை கலால் பிரிவு மேலும் விசாரணை நடத்தி வருகிறது.