சட்டவிரோத போதை மாத்திரைகள் கொண்ட ஒரு நபர் கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு ஒருங்கிணைந்து 2020 மே 22 ஆம் திகதி திருகோணமலை, ஒர்ஸ்ஹில் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத போதை மாத்திரைகள் கொண்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

நாட்டிற்குள் நடைபெறுகின்ற சட்டவிரோத செயல்கள் தடுப்பதற்கும் தீவைச் சுற்றியுள்ள பெருங்கடலை பாதுகாப்பதற்கும் கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் திருகோணமலை மாவட்ட ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகளுடன் இணைந்து, 2020 மே 22 ஆம் திகதி திருகோணமலை ஒர்ஸ்ஹில் பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவலடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான ஒருவரிடமிருந்து 150 மிலி கிராம் கொண்ட 650 சட்டவிரோத போதை மாத்திரைகள் மற்றும் 05 மிலி கிராம் கொண்ட 60 போதை மாத்திரைகள் கண்டு பிடிக்கப்பட்டதுடன் குறித்த நபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட 50 வயதான சந்தேகநபர் குறித்த பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட போதைப்பொருள் மாத்திரைகளுடன் அவர் மேலதிக விசாரணைக்காக திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.