பாதிக்கப்பட்ட மீன்பிடிக் படகுகளுக்கு தேவையான எரிபொருளை சமுதுர கப்பல் மூலம் மேலும் வழங்கப்படுகிறது

‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட மீன்பிடி படகுகள் இப்போது இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவின் ஆதரவுடன் மீண்டும் இலங்கையை நோக்கி வருகின்றன. இவ்வாரு வருகின்ற குறித்த மீன்பிடிக் படகுகளுக்கு தேவையான உணவு, நீர், மருத்துவ பொருட்கள் மற்றும் எரிபொருளை சமுதுர கப்பல் மூலம் மேலும் வழங்கப்படுகின்றன.

அதன்படி, சமுதுர கப்பலின் மேற்பார்வையின் கீழ் தீவுக்குத் திரும்பி வருகின்ற இந்த மீன்பிடிக் படகுகள் கடற்கரையிலிருந்து சுமார் 375 கடல் மைல் தொலைவில் உள்ளன. அவற்றில் சதெவுமி 04, சானு புத்தா 2, மதுசங்க, சயூரி 06. ரன்புதா, சப்னா 08, ஆர்.எம்.எஸ் 10, டியானா 01, சுரேஷ் 3, சிசிர 3, தஹாமி 1, தனுஜா 6, சிசிர 1, பிஷான் புத்தா 1, தியதி 3 மற்றும் தெனெத் புத்தா 2 ஆகிய 16 பல நாள் படகுகளுக்கு உணவு, நீர், மருத்துவ பொருட்கள் மற்றும் எரிபொருள் சமுதுர கப்பல் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த படகுகள் அனைத்தையும் சமுதுர கப்பல் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது, மேலும் குறித்த படகுகள் கரைக்கு வரும் வரை தேவையான அனைத்து உதவிகளையும் கடற்படையால் வழங்கப்படும்.