மேலும் ஆறு நபர்கள் கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு வெளியேறினர்

கற்பிட்டி பகுதியில் உள்ள இரண்டு கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தனிமைப்படுத்தப்பட்ட ஆறு (06) நபர்கள், தங்களது தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறை முடிந்ததும், 2020 மே 25 ஆம் திகதி மையங்களை விட்டு வெளியேறினர்.

இவ்வாரு தனிமைப்படுத்தப்பட்ட செயல்முறையை முடித்த நபர்களின், 05 நபர்கள் ஒரு கடற்படை வீரரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என குறிப்பிடத்தக்கது. குறித்த நபர்களைஅரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வீடுகளுக்கு அனுப்பப்பட்டதுடன் தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ்களை கடற்படையால் வழங்கப்பட்டது.

இந்த நபர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களை விட்டு வெளியேறினாலும் இன்னும் 14 நாட்கள் தங்களுடைய வீடுகளில் சுய தனிமைப்படுத்தப்படுவார்கள்