அம்பலங்கொடை பிரதான வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ அனர்த்தம் கட்டுப்படுத்த கடற்படையின் உதவி

அம்பலங்கொடை பிரதான வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த இன்று (2020 மே 26) கடற்படையினர் மற்றும் காலி தீயணைப்பு படையணி நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர்.

அதன் படி, அம்பலங்கொடை பிரதான வீதியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தினை பற்றி தெற்கு கடற்படை கட்டளையின் செயல்பாட்டு அறைக்கு கிடைத்த தகவல்களின்படி தெற்கு கடற்படை கட்டளையின் வீர்ர்களினால் இத்தீயணைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதன் படி தெற்கு கடற்படை கட்டளையின் தீயணைப்பு பிரிவின் கடற்படை விரர்கள் மற்றும் தண்ணீர் பவுசர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீயை அணைக்கவும், வணிக வளாகம் முழுவதும் தீ பரவாமல் தடுக்கவும் கடற்படையினர் நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். இதுக்காக அம்பலங்கொடை நகர சபை, பொலிஸார் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்கள் தங்களுடைய ஆதரவை வழங்கியுள்ளனர்.

ஒரு உணவகம், ஒரு மின் உபகரணங்கள் கடை மற்றும் ஒரு ஜவுளி கடை தீயில் முற்றிலும் அழிந்துவிட்டதுடன் குறித்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. இந்த சம்பவம் குறித்து அம்பலங்கொடை பொலிஸார் மேலதிக விசாரனைகள் மேற்கொண்டுவருகின்றன. மேலும், நாட்டில் எந்தவொரு அவசர நிலையிலும் முன்னணியில் இருக்கும் இலங்கை கடற்படை, ஏதேனும் பேரழிவு ஏற்பட்டால் பொதுமக்களுக்கு உதவ தயாராக உள்ளது.