‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் அடித்துச் செல்லப்பட்ட மீன்பிடி படகுகள் பாதுகாப்பாக கரைக்கு கொண்டுவர கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

‘அம்ப்பன்’ சூறாவளியின் தாக்கத்தால் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்ட இலங்கையின் மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படை கப்பல் சமுதுரவின் ஆதரவுடன் மீண்டும் பாதுகாப்பாக கரைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இலங்கையின் கிழக்கு கடலில் அந்தமான் தீவு பகுதியில் வளிமண்டலத்தில் கொந்தளிப்புடன் 2020 மே 13 ஆம் திகதி இலங்கையிலிருந்து சுமார் 1,000 கி.மீ தூரத்தில், வங்காள விரிகுடாவின் தென்கிழக்கில் இது குறைந்த அழுத்தாக மாறியது. அதன் படி 2020 மே 16 ஆம் திகதி இது சூறாவளியாக உருவாகும் அறிகுறிகளைக் காட்டியது.

இந்தப் பின்னணியில், வானிலை ஆய்வுத் துறை, மீன்வள மற்றும் நீர்வளத் துறை மற்றும் இலங்கை கடற்படை ஆகியவை இது குறித்து மீன்பிடி சமூகத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுத்தது. இருப்பினும், அந்த நேரத்தில் 50 க்கும் மேற்பட்ட இலங்கை பல நாள் மீன்பிடிப் படகுகள்கள் சர்வதேச கடல் எல்லையில் சுமார் 400 மற்றும் 500 கடல் மைல் தொலைவில் மீன்பிடிக்கச் சென்றிருந்தது. மேலும் இந்த படகுகளில் சில படகுகள் சூறாவளியின் தாக்கத்தால் இந்தோனேசியா கடற்பகுதிக்கு அடித்துச் செல்லப்பட்டன.

இதற்கிடையில், இலங்கை கடற்படையின் கீழ் செயல்படும் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம் (Maritime Rescue Coordination Center – MRCC) இந்தோனேசிய கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்திற்கு வளரும் நிலைமை குறித்து அறிவித்தது, இதன் விளைவாக பாதிக்கப்பட்ட படகுகள் இந்தோனேசியா கடல் பகுதியில் தங்க அனுமதிக்கப்பட்டன.

குறித்த படகுகளின் 36 படகுகளுக்கு மீண்டும் இலங்கையை நோக்கி வர தேவையான எரிபொருள், உணவு மற்றும் நீர் எதுவும் இல்லை என்றும், பல படகுகளின் இயந்திரக் குறைபாடுகள் பதிவாகியுள்ளதாகவும் மீன்வள மற்றும் நீர்வளத் துறை கடற்படைக்குத் தெரிவித்துள்ளது.

இந்தப் பின்னணியில் பல நாள் மீன்பிடிக் படகுகளுக்கு உதவுவதற்காக இலங்கை கடற்படை 2020 மே 21 அன்று இலங்கை கடற்படையின் உயர் தொழில்நுட்ப ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பலான இலங்கை கடற்படை கப்பல் சமுதுர குறிப்பிட்ட பகுதிக்கு அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட அனைத்து படகுகளுடனும் தகவல்தொடர்புகளை ஏற்படுத்திய பின்னர் அனைத்து படகுகளுக்கும் இலங்கையை நோக்கிச் செல்லுமாறு அறிவுறுத்தியது.

அதன்படி, 2020 மே 23 அன்று இலங்கை கடற்கரையிலிருந்து சுமார் 550 கடல் மைல் தொலைவில் சூறாவளியின் தாக்கத்தால் அடித்துச் செல்லப்பட்ட மீன்பிடிப் படகுகளை இலங்கை கடற்படை கப்பல் சமுதுர முதன்முதலில் கண்டறிந்தது. அடுத்த இரண்டு நாட்களில், கடற்படைக் கப்பல் தொடர்ந்து இந்த படகுகளுக்கு உணவு, நீர், எரிபொருள், மருத்துவ உதவி மற்றும் பழுதுபார்ப்பு உதவிகளை வழங்கியது.

பாதிக்கப்பட்ட இந்த பல நாள் மீன்பிடித் தொழிலாளர்கள் 2020 ஏப்ரல் 18 முதல் மே 05 வரை குடாவெல்ல, அம்பலங்கொடை மற்றும் காலி மீன்வளத் துறைமுகங்களில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காக கடலுக்கு புறப்பட்டனர். இந்த நிகழ்வுக்கு உடனடியாக பதிலளித்த கடற்படை, இந்த படகுகளையும் இந்த படகுகளின் அனைத்து மீனவர்களையும் பாதுகாப்பாக அருகிலுள்ள கடற்கரைக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்த சிறப்பு பணிக்காக பங்களித்த இலங்கை கடற்படை கப்பல் சமுதுர போரின் போது மிதக்கும் ஆயுதங்களை அழிப்பது உட்பட பல வெற்றிகரமான கடற்படை நடவடிக்கைகளை நிறைவேற்ற பங்களித்தது. அத்துடன் சமீபத்திய காலங்களில் கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட பல போதைப்பொருள் கைது செய்த நடவடிக்கைகளும் அடங்கும்.