கடற்படையினரால் முஹுது மஹா விஹாரயவில் நிருவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் பொது மக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் உத்தரவின் பேரில் பொத்துவில் முஹுது மஹா விஹாரயவில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையமொன்று தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் செனரத் விஜேசூரியவால் 2020 மே 28 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

அப்பகுதி மக்களின் குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்வதுக்காக இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் பொத்துவில் முஹுது மஹா விஹார வளாகத்தில் சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ அமைச்சகத்தின் ஆதரவின் கீழ் கடற்படையினரால் நிறுவப்பட்டது. இந் நிகழ்வுக்காக மகா சங்கத்தினர், பொத்துவில் பிரதேச செயலாளரின் தலைமைச் செயலாளர், தென்கிழக்கு கடற்படை கட்டளை துணைத் தளபதி மற்றும் பிற கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். மகா சங்கத்தினரின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் திறந்து வைக்கப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கும் வரலாற்று கோயிலையும் வணங்க வரும் பக்தர்களுக்கும் குடிநீரை வழங்கும் திறன் கொண்டது.

நாள்பட்ட சிறுநீரக நோயைத் தடுக்கும் தேசிய திட்டத்தின் ஒரு பங்காளராக, சிறுநீரக நோய்கள் அதிகம் உள்ள பகுதிகளில் மக்களுக்கு தூய்மையான குடிநீரை வழங்குவதற்காக அதிக நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவ கடற்படை உறுதியாக உள்ளது.