கடற்படையால் பல வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன

கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2020 மே 29 ஆம் திகதி மன்னார், வெடிதலதீவு பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது பல வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன.

வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் அடம்பன் பொலிஸார் 2020 மே 29 ஆம் திகதி மன்னார் வேதிதலதீவு பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது சமீபத்தில் சுத்தம் செய்யப்பட்ட இந்த பகுதியில் கைவிடப்பட்ட கிணற்றின் அருகில் இருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 29 குண்டுகள் மற்றும் இரண்டு 60 மிமீ மோட்டார் உருகிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இவ்வாரு கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் மனிதாபிமான நடவடிக்கையின் போது கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது. இந்த வெடி குண்டுகள் மற்றும் 60 மிமீ மோட்டார் உருகி ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக அடம்பன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.