நிகழ்வு-செய்தி

கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த ஹெலசரண இஸ்ரேல் அமைப்பு மூலம் கடற்படைக்கு பல பாதுகாப்பு மருத்துவ உடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டன

நாட்டிற்குள் கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை மேற்கொள்கின்ற நடவடிக்கைகளுக்கு தெவையான பல பாதுகாப்பு மருத்துவ உடைகள் கட்டுநாயக்க ஹெலசரண இஸ்ரேல் அமைப்பு மூலம் கடற்படைக்கு வழங்கப்பட்டது.

30 May 2020

கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 22 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்- குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 388 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 22 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 மே 29 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

30 May 2020

கடற்படை தயாரித்த மேலும் ஒரு மெடி மேட் (Medi mate) இயந்திரம் தெல்தெனிய அடிப்படை வைத்தியசாலைக்கு ஒப்படைக்கப்பட்டன

மருத்துவ பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க இலங்கை கடற்படையால் தயாரிக்கப்பட்ட மற்றொரு மெடி மேட் (Medi mate) தொலை கட்டுப்பாட்டு தானியங்கி சாதனம் இன்று (2020 மே 29) தெல்தெனிய அடிப்படை வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டது.

30 May 2020

கடற்படையால் பல வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன

கடற்படையினர் பொலிஸாருடன் இணைந்து 2020 மே 29 ஆம் திகதி மன்னார், வெடிதலதீவு பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது பல வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன.

30 May 2020

உள்ளூர் கஞ்சா கொண்ட ஒரு நபர் (01) கடற்படை உதவியுடன் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 மே 29 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் குடா ஓய, ஆனந்த புர பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் பொது உள்ளூர் கஞ்சா வைத்திருந்த ஒரு நபர் கைது செய்யப்பட்டார்.

30 May 2020