கோகிலாய் பகுதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டொன்று கடற்படையால் செயலிழக்கப்பட்டது

2020 மே 30 ஆம் திகதி கோகிலாய் பகுதியில் மீட்கப்பட்ட வெடிகுண்டொன்று பாதுகாப்பாக செயலிழக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒருவரிடம் கிடைத்த தகவலின்படி, கோகிலாய் கடற்படை முகாமிலிருந்து 150 மீட்டர் தொலைவில் இந்த வெடிகுண்டு கைப்பற்றப்பட்டதுடன் குறித்த வெடிகுண்டு பாதுகாப்பாக செயலிழக்க கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த மனிதாபிமான நடவடிக்கையின் போது இந்த வெடிகுண்டு விடுதலைப் புலிகளால் கைவிடப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.