உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒரு பெண் கைது செய்ய கடற்படை உதவி

கடற்படை மற்றும் பொலிஸார் இணைந்து 2020 மே 31 ஆம் திகதி சிலாவத்துரை, மரிச்சிகட்டி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒரு பெண் கைது செய்யப்பட்டார்.

சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை வழக்கமான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, 2020 மே 31 ஆம் திகதி, வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள் சிலாவத்துரை பொலிஸாருடன் இணைந்து, சிலாவத்துரை, மரிச்சிகட்டி பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி ஒன்று ஒரு வீட்டினுள் மறைத்து வைக்கப்பட்டிருந்த போது கண்டுபிடித்தனர். அதன் படி குறித்த வீட்டில் தங்கியிருந்த ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட பெண் அப்பகுதியில் வசிக்கும் 34 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இந்த சம்பவம் குறித்து சிலாவத்துரை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.