நிகழ்வு-செய்தி

கடற்படையின் பங்களிப்புடன் அங்கொடை தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் கணினிமயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு பிரிவுக்கான புதிய கட்டிடம் கடற்படையின் பங்களிப்புடன் கட்டப்பட்டது.

அங்கொடை தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தில் கணினிமயமாக்கப்பட்ட ஸ்கேனிங் கதிர்வீச்சு பிரிவுக்காக (CT Scanner Unit) கடற்படையின் பங்களிப்புடன் கட்டபட்ட இரண்டு மாடி கட்டிடம் 2020 ஜூன் 04 அன்று அதிகாரப்பூர்வமாக குறித்த நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

05 Jun 2020

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு இலக்கான மேலும் 17 கடற்படை வீரர்கள் பூரணமாக குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 443 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 17 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 04 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

05 Jun 2020

மேலும் 25 நபர்கள் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தை விட்டு வெளியேறினர்

பூஸ்ஸ கடற்படை தளத்தில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் தங்களது தனிமைப்படுத்தலை வெற்றிகரமாக முடித்த 25 நபர்கள் 2020 ஜூன் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் மையத்தை விட்டு புறப்பட்டு சென்றுள்ளனர்.

05 Jun 2020

யான்ஓய பகுதியில் உள்ள ஒரு சதுப்பு நிலத்திலிருந்து தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற பல ரவைகள் மீட்கப்பட்டன

கடற்படை, பொலிஸார் மற்றும் பொலிஸ் சிறப்பு பணிக்குழு ஒருங்கிணைந்து 2020 ஜூன் 04 ஆம் திகதி யான்ஓய, வீரவுதீவு பகுதியில் மேற்கொண்டுள்ள சோதனை நடவடிக்கையின் போது தானியங்கி துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற பல ரவைகள் மீட்கப்பட்டன.

05 Jun 2020