கொவிட் -19 வைரஸ் தொற்று குணமடைந்த 34 கடற்படை வீரர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர் - குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 522 ஆக அதிகரிப்பு

கொவிட் -19 வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 34 கடற்படை வீரர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் குறித்த வைரஸ் அவர்களுடைய உடலில் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் 2020 ஜூன் 07ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

இவ்வாறு வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறிய கடற்படை வீரர்களின் 17 நபர்கள் ஹோமாகம வைத்தியசாலையிலும், 12 நபர்கள் இரனவில வைத்தியசாலையிலும், 05 நபர்கள் ஐ.டி.எச் வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். அதன் படி குறித்த வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுகொண்டிருந்த போது, அவர்கள் மீது நடத்தப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளின் பின் அவர்களின் உடலில் குறித்த வைரஸ் இல்லை என்பது தெரியவந்ததுடன் அவர்கள் 2020 ஜூன் 07 ஆம் திகதி வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர்.

அதன்படி, இந்த 34 நபர்களும் உட்பட 522 கடற்படை வீரர்கள் முழுமையாக குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறினர். வெளியேறிய கடற்படை வீர்ர்கள் சுகாதார அறிவுறுத்தல்களைப் பின்பற்றி மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.