மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களைக் கொண்ட நபரொருவர் கடற்படையால் கைது

புல்மூட்டை, ஜின்னபுரம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது, மீன்பிடி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படும் வெடிபொருட்களைக் கொண்ட நபரொருவர் 2020 ஜூன் 08 ஆம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டார்.

வெடிபொருட்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடித்தல் மூலம் மீன் மற்றும் கடல் வளங்களை அழிப்பதைத் தடுக்க இலங்கை கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இத்தகைய நடவடிக்கைகளின் விரிவாக்கமாக, புல்மூட்டை, ஜின்னபுரம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்ட, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை வீரர்கள், சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று கரைக்கு வருவதைக் கவனித்து, தரைக்கு வந்த பின் குறித்த படகை சோதனை செய்தனர். அப்போது, மணலுடன் கலந்த அடையாளம் தெரியாத வெடிபொருள் 69 கிராம், 03 மின்சார அல்லாத டெட்டனேட்டர்கள், 04 அங்குல நீளத்தில் 03 பாதுகாப்பு உருகி ஆகியவை மீட்கப்பட்டன. அதன் படி குறித்த படகில் இருந்த ஒரு நபருடன் டிங்கி படகு மற்றும் மீன்பிடிபொருட்கள் கைது செய்யப்பட்டது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 41 வயதுடைய மூத்துர் பகுதியில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டார். மேலும் சந்தேக நபர் வெடிபொருள் மற்றும் டிங்கி படகு மேலதிக விசாரணைகளுக்காக புல்மூட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.