விசா இல்லாமல் இந்நாட்டில் தங்கியிருந்த 06 இந்தியர்கள் கடற்படையால் கைது

செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாமல் மற்றும் விசா நிபந்தனைகளை மீறி இந்நாட்டில் தங்கியிருந்த 6 இந்திய நாட்டினரை யாழ்ப்பாணம் குரிகாட்டுவான் இறங்குதுறையில் இலங்கை கடற்படை 2020 ஜூன் 8 ஆம் திகதி கைது செய்தது.

வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் 2020 ஜூன் 08 ஆம் திகதி யாழ்ப்பாணம் குரிகட்டுவான் இறங்குதுறை அருகே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்த சந்தேகத்திற்கிடமான நபர்களை சோதனை செய்தனர். அப்போது குறித்த நபர்கள் அனைவரும் இந்தியர்கள் என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. மேலும் அவர்கள் கட்டுமானப் பணிகளுக்காக நெடுந்தீவுக்கு செல்ல குரிகட்டுவான் இறங்குதுறையில் இவ்வாரு தங்கியிருந்தனர். பின்னர் அவர்களின் வெளிநாட்டு கடவுச்சீட்டு சோதித்த போது அவை காலாவதியாகியுள்ள காரனத்தினால் மற்றும் அவர்களின் சிலர் சுற்றுலா விசாக்களினால் இலங்கைக்கு வந்து இதுபோன்ற வேலைகளில் ஈடுபட்டதன் விளைவாக இலங்கை கடற்படை அவர்களை கைது செய்தது.

அவர்களின் விசாக்கள் காலாவதியாகியதற்காகவும், குடிவரவு சட்டங்களை மீறியதற்காகவும் கடற்படை அவர்களால் கைது செய்யப்பட்டதுடன் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குரிகட்டுவான் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.