இரண்டு (02) போதைப்பொருள் விற்பனையாளர்கள் கடற்படை நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டனர்

2020 ஜூன் 21 அன்று தலைமன்னார் மற்றும் பெசாலையில் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி தேடல் நடவடிக்கைகளின் போது 02 போதைப்பொருள் விற்பனையாளர்களை கடற்படை கைது செய்தது.

நாட்டில் போதைப்பொருள் கடத்தலுக்கு கடுமையான கட்டுப்பாட்டைக் கொடுக்கும் நோக்கில் இலங்கை கடற்படை வழக்கமான போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோன்ற தேடல் நடவடிக்கையின் போது, தலைமன்னார் காவல்துறையின் ஒருங்கிணைப்புடன், வடக்கு கடற்படைத் தளபதியுடன் இணைக்கப்பட்ட கடற்படைப் வீரர்கள், தலைமன்னாரில் 25.75 கிராம் மெல்லும் புகையிலை (மாவா) வைத்திருந்த ஒருவரை கைது செய்ய முடிந்தது.

அதே நாளில், போதைப்பொருள் பிரிவின் உதவியுடன் அதே கட்டளையைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் குழு -மற்றொரு சந்தேக நபரை 500 மி.கிராம் ஹெராயின் வைத்திருந்ததாக பெசாலையின் பொதுப் பகுதியில் கைது செய்யபட்ட்டார்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் 40 மற்றும் 70 வயதுடைய, தலைமன்னார் மற்றும் பெசாலை குடியிருப்பாளர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து தலைமன்னார் மற்றும் பெசாலை காவல் நிலையங்களில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.