பதிவு செய்யப்படாத வல்லம் படகு கடற்படையால் கைப்பற்றப்பட்டது

பதிவு செய்யப்படாத பாரம்பரிய படகு (வல்லம்) ஐப் பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட ஒருவரை கடற்படை 2020 ஜூன் 21 அன்று உப்புக்குளம் கடலில் மேற்கொண்ட தேடலில் கைது செய்தது.

சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடுப்பதற்காக தீவின் நீரில் கடற்படை வழக்கமான ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதேபோன்ற நடவடிக்கையின் போது, பதிவு செய்யப்படாத பாரம்பரிய படகில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் இந்த நபரை வட மத்திய கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் கைது செய்தனர். சந்தேக நபருடன், படகு மற்றும் அதன் வெளிப்புற மோட்டார் ஆகியவை கடற்படை காவலில் வைக்கப்பட்டுள்ளன.

குற்றம் சாட்டப்பட்டவர் மன்னாரில் வசிக்கும் 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களுடன் சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக மன்னாரில் உள்ள மீன்வள உதவி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.