சுமார் 400 கிலோ கிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்பு

மண்டைதீவு கடற்பரப்பில் இன்று (2020 ஜூலை 03) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையின் போது சுமார் 400 கிலோ கிராம் கேரளா கஞ்சா தொகையொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

இலங்கைக்கு கடல் வழியாக கொண்டு வரப்படும் போதைப்பொருள் கடத்தல் முயற்சிகளைத் தடுக்க இலங்கை கடற்படை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதன்படி, யாழ்ப்பாணம், மண்டைதீவு மற்றும் கல்முனேதுடுவை கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான படகொன்று மூலம் கடலுக்குள் பல பொதிகளை விட்டு தப்பிச் செல்வதைக் கவனித்த கடற்படையினர் கடலில் மிதக்கும் 12 பொதிகளை மீட்டள்ளனர். குறித்த பொதிகளில் 168 சிறிய பொட்டலங்களாக இருந்த கேரள கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டன.

தப்பிப்சென்ற படகு மற்றும் சந்தேக நபர்களைக் கண்டுபிடிப்பதற்காக கடற்படை மற்றும் காவல்துறை சிறப்பு பணிக்குழு தற்போது தேடுதல் பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது, இந்த சம்பவம் தொடர்பாக ஒரு சந்தேக நபரை யாழ்ப்பாணம் பொலிஸ் சிறப்பு பணிக்குழு கைது செய்துள்ளது.

இந்த நடவடிக்கையின் போது 400 கிலோவுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது மற்றும் அதன் தெரு மதிப்பு 60 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. கடற்படையினரால் கைது செய்யப்பட்ட குறித்த போதை பொருட்கள் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சிறப்பு பணிக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டன.

இந்த ஆண்டுக்குள் வடக்கு மாகாணத்தில் 2468 கிலோகிராம் கேரளா கஞ்சாவை கடற்படை பறிமுதல் செய்துள்ளதுடன் கடற்படை இதுவரை நடத்திய 91 நடவடிக்கைகளின் போது 141 நபர்கள் மற்றும் மூன்று டன்னுக்கு மேற்பட்ட கேரள கஞ்சா கைது செய்யப்பட்டது

இந்த நடவடிக்கையின் போது நாட்டில் கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக, கைப்பற்றப்பட்ட அனைத்து பொருட்களையும் முற்றிலுமாக கிருமி நீக்கம் செய்யவும், சுகாதாரத் துறை வழங்கும் அனைத்து சுகாதார நடைமுறைகளுக்கும் இணங்கவும் கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.