சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் ஆபத்தான மருந்துகள் கொண்ட இரண்டு (02) நபர்களை கைது செய்ய கடற்படை உதவி

கடற்படையினர் காவல்துறையினருடன் இனைந்து 2020 ஜூலை 18 மற்றும் 19 ஆம் திகதிகளில் திருகோணமலை பகுதியில் மேற்கொண்டுள்ள இரண்டு தனித்தனி நடவடிக்கைகளின் போது, வலி நிவாரணி மருந்துகள் கொண்ட ஒரு நபர் மற்றும் ஹெராயின் போதைப்பொருள் வைத்திருந்த ஒரு பெண் கைது செய்யப்பட்டனர்.

நாட்டில் சட்டவிரோத போதைப்பொருள் பரவுவதை தடுக்க கடற்படை தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது, அதன் படி மேலும், போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்கள், பாடசாலை குழந்தைகள் மற்றும் பொது மக்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தடுக்கும் தேசிய பணியில் பங்களிப்பு செய்கிறது. அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் திருகோணமலை துறைமுக காவல்துறை அதிகாரிகள், 2020 ஜூலை 18, அன்று திருகோணமலை கணேஷ் லேன் சாலையில் ஒரு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். அங்கு மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் 100 ப்ரீகாசிம் (Pregazim) வலி நிவாரணி காப்ஸ்யூல்கள் (10 அட்டைகள்) பறிமுதல் செய்யப்பட்டதுடன் விநியோகிப்பதற்காக கொண்டு செல்லப்பட்ட சந்தேகநபர் (01) மோட்டார் சைக்கிளுடன் கைது செய்யப்பட்டார்.

மேலும், சீன துறைமுக பொலிஸாருடன் இனைந்து திருகோணமலை சீன துறைமுக பகுதியில் 2020 ஜூலை 19, அன்று நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, சுமார் 01 கிராம் ஹெராயின் வைத்திருந்த ஒரு பெண் கைது செய்யப்பட்டார். ஹெராயின் விற்பனைக்கு எடுத்துச் செல்லப்படுவது மேலும் அங்கு தெரியவந்தது.

18 முதல் 45 வயதுக்குட்பட்ட குறித்த சந்தேக நபர்கள் திருகோணமலை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து திருகோணமலை துறைமுக காவல்துறை மற்றும் திருகோணமலை சீனா பே காவல்துறை மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.