புதிய கடற்படை தளபதி ஸ்ரீ தலதா மாலிகைக்கு விஜயம்

புதிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் கடற்படை தளபதியாக பொறுப்பேற்ற பின் 2020 ஜூலை 22 ஆம் திகதி கண்டி ஸ்ரீ தலதா மாலிகைக்கு சென்று ஆசீர்வாதங்களை பெற்று கொண்டார்.

ஸ்ரீ தலதா மாலிகயின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல அவர்களை சந்தித்த கடற்படை தளபதி சிறப்பு விருந்தினர்களுக்கான புத்தகத்தின் நினைவூட்டல் குறிப்பை வைத்தார். அத்துடன் இந்நிகழ்வினை நினைவு கூறும் வகையில் நினைவுச் சின்னங்களையும் பரிமாறிக் கொள்ளப்பட்டன வரவிருக்கும் வருடாந்திர பெரஹேர விழாவின் செயல்பாடுகள் மற்றும் தற்போதுள்ள கோவிட் 19 தொற்றுநோயை எதிர்கொண்டு பெரஹெர திருவிழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு கடற்படையின் பங்களிப்பு குறித்தும் அவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

பின்னர், கடற்படைத் தளபதி புனித தலதா மாலிகைக்கு மரியாதை செலுத்தி, கடற்படையின் எதிர்கால நடவடிக்கைகளுக்காக புனித தலதா மாலிகையின் ஆசீர்வாதங்களைப் பெற்றார். இந்நிகழ்ச்சியில் கடற்படைத் தளபதியின் அன்பு மனைவியும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவருமான திருமதி சந்திமா உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

மேலும், கடற்படை தளபதியவர்கள் மேனிக்ஹின்ன ஹுரிகடுவ ஸ்ரீ வித்யாசாகர மஹா பிரிவேனவுக்கு விஜயம் செய்து இலங்கை ராமண்ணா மஹா நிகாயவின் மிகவும் வணக்கத்திற்குரிய நாபான ஸ்ரீ பெமசிறி தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார். அதன் பின் வரலாற்று சிறப்புமிக்க கெடம்பே ரஜமஹா விஹாரையின் வணக்கத்திற்குரிய கெப்பெட்டியகோடா சிரிவிமல நாயக்க தேரரை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுள்ளார்.