வெலிசர கடற்படையினர் நினைவுச்சின்னத்திற்கு புதிய கடற்படை தளபதி மலர் அஞ்சலி செலுத்தினார்

இலங்கை கடற்படையின் 24 வது கடற்படைத் தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்கள் கடற்படை தளபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக இன்று (2020 ஜூலை 31) வெலிசரவுள்ள கடற்படையினர் நினைவுச்சின்னம் அருகில் பயங்கரவாதத்தை நீக்கும் நடவடிக்கைகளின் போது தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த மற்றும் காணாமல் போன கடற்படையினர் நினைவு கூறி மலர் அஞ்சலி செலுத்தினார்.

சேவையில் இருக்கும்போது உயிர் தியாகம் செய்த மற்றும் காணாமல் போன அனைத்து கடற்படை வீரர்களின் சிறந்த சேவையைப் பாராட்டும் வகையில் கடற்படை மரபுகளுக்கு இணங்க நடைபெற்ற இந்த விழாவுக்காக கடற்படை தலைமையகத்தின் பணிப்பாளர் நாயகம்கள், மேற்கு கடற்படை கட்டளையின் தளபதி உட்பட அதிகாரிகள் மற்றும் கடற்படை வீர்ர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டின் மற்றும் தேசத்தின் இன்றைய நாளுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த கடற்படை வீரர்களின் சேவையை மரியாதையுடன் நினைவுபடுத்திய கடற்படைத் தளபதி குறித்த வீரர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தற்போது ஊனமுற்றிருக்கும் வீர்ர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.