கடற்படை தொழில்நுட்ப மற்றும் மனிதவள பங்களிப்புடன் மற்றொரு நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக திறந்து வைக்கப்பட்டது

இலங்கையில் கொடிய சிறுநீரக நோயை ஒழிப்பதற்கான தேசிய பணியின் ஒரு பகுதியாக பானம பகுதியில் நிருவப்பட்ட 758 வது நீர் சுத்திகரிப்பு நிலையத்தை கடற்படை இன்று (2020 ஆகஸ்ட் 7) திறந்து வைத்தது.

சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சகம் தலைமையில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் இலங்கை கடற்படையின் திறமையான நிபுணத்துவம் மற்றும் மனிதவளத்துடன் ஸ்ரீ போதிருக்காராம விஹாராயத்தில் புதிய நீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை நிர்மாணிக்கப்பட்டது. இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் பானம மத்திய கல்லுரியின் மாணவர்களுக்கும், கிராம மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீரை அணுக உதவுகிறது.

புதிதாக கட்டப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறப்பு விழா தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில் மற்றும் ஸ்ரீ போதிருக்காரம விஹாரய சங்கத்தினர், இலங்கை கடற்படை கப்பல் மஹானாக நிருவனத்தின் கட்டளை அதிகாரி உட்பட கடற்படையினர், பானம மத்திய கல்லுரியின் மாணவர்கள், அப்பகுதியில் வசிப்பவர்கள் ஆகியோரின் பங்களிப்பில் இடம்பெற்றது.