கடற்படைத் தளபதி அட்மிரல் ஒப் த ப்லீட், வசந்த கரண்ணாகொடவை சந்தித்தார்

இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்டுள்ள வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன, 2020 ஆகஸ்ட் 10 ஆம் திகதி எதுல் கோட்டே பகுதியில் அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரண்ணாகொடவை சந்தித்தார்.

அட்மிரல் ஒப் த ப்லீட், வசந்த கரண்ணாகொட இலங்கை கடற்படையின் மதிப்புமிக்க ஐந்து நட்சத்திர தரவரிசை பெற்ற முதல் கடற்படை அதிகாரி ஆவார். 2005 முதல் 2009 வரை இலங்கை கடற்படையின் 15 வது கடற்படை தளபதியாக, மனிதாபிமான நடவடிக்கையின் போது தனது அனுபவச் செல்வத்துடன் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார் மற்றும் கடற்படைக்கு பலவிதமான உத்திகளை அறிமுகப்படுத்தினார்.

அட்மிரல் ஒப் த ப்லீட், வசந்த கரண்ணாகொட கடற்படை தளபதியாக பணியாற்றிய காலத்தில் 4 வது துரித தாக்குதல் படைப்பிரிவின் சுயமாக நியமிக்கப்பட்ட தளபதியாக இருந்த தற்போதைய கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன 2006 ஜனவரி முதல் 2007 ஜூலை வரை 4 வது துரித தாக்குதல் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக மனிதாபிமான நடவடிக்கைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார்.

இலங்கை கடற்படையின் 24 வது தளபதியாக நியமிக்கப்பட்ட பின்னர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரண்ணாகொடவுடன் மேற்கொண்டுள்ள இந்த முதல் அதிகாரப்பூர்வ சந்திப்பில் கடற்படையின் எதிர்காலம் குறித்த கருத்துக்களை பரிமாறிக்கொண்டார். இங்கு கடற்படை தளபதியும் அட்மிரல் ஒப் த ப்லீட் வசந்த கரண்ணாகொடவும் நினைவு பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.