வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மாதந்தோறும் மருந்துகளை வழங்குவதற்கான புதிய வழிமுறையை அறிமுகப்படுத்தப்பட்டது.

வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் வீட்டுக்கு மருந்துகளை வழங்குவதற்கான புதிய வழிமுறையை 2020 ஆகஸ்ட் 17 ஆம் திகதி முதல் கடற்படையினரால் அமல்படுத்த உள்ளது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் கருத்துப்படி வெலிசர கடற்படை பொது வைத்தியசாலையில் தற்போது நடத்தப்பட்டு வரும் கிளினிக்குகளில் சிகிச்சை பெற்று வரும் போரில் இறந்தவர்களின் (KIA) மற்றும் காணாமல் போனவர்களின்(MIA) குடும்ப உறுப்பினர்கள், போரின் போது ஊனமுற்ற கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்பங்களின் நெருங்கிய உறவினர்கள்(WIA), தற்போது பணிபுரியும் கடற்படையினர்கள் அவர்களது வாழ்க்கைத் துணைவர்கள் மாதந்தோறும் பெற்ற மருந்துகள் (இன்சுலின் போன்ற குளிர் சங்கிலி மருந்துகளைத் தவிர) இந்த புதிய முறையின் கீழ் அவர்களின் வீடுகளுக்கு வழங்கப்படுகின்றது.

இந்த உந்துதலின் கீழ் நீண்டகால சிகிச்சையை பரிந்துரைக்கும் நோயாளிகளுக்கு (நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம், இதய நோய், ஆஸ்துமா, நாள்பட்ட சிறுநீரக நோய், கர்ப்பம், கண், தோல், நரம்பியல் மற்றும் மனநல நோய்கள்) மருந்துகளை விநியோகிக்கப்படும். மருந்துகளைப் பெறுவதற்காக மருத்துவர் நோயாளியை பரிசோதித்தபின் வழங்கிய மருந்து துண்டுப்பிரசுரம், கடைசியாக வழங்கப்பட்ட மருந்து வகைகள், பதிவு எண், தொலைபேசி எண் மற்றும் மருந்து பெறுவதற்கான முகவரி மற்றும் கிராம நிலதாரி பிரிவு ஆகியவற்றை வாட்ஸ்அப்(WhatsApp), வைபர்(Viber) அல்லது இமோ (Imo) தொழில்நுட்பத்தின் மூலம் 076 3305033 தொலைபேசி எண்ணிற்கு அனுப்ப வேண்டும்.

மேலும், இன்சுலின் போன்ற குளிர் சங்கிலி மருந்துகளை எடுத்துக்கொள்பவர்கள் கடற்படை பொது வைத்யசாலைக்கு வந்து மருத்துவ பரிந்துரைப்படி பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை பெற்றுக்கொள்ளலாம், இது தொடர்பான அனைத்து விசாரணைகளையும் பின்வரும் தொலைபேசி எண்களில் பெறலாம்.

076 3305033 - போரில் இறந்தவர்களின் மற்றும் காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள், போரின் போது ஊனமுற்ற கடற்படையினர் மற்றும் அவர்களது குடும்பங்களின் நெருங்கிய உறவினர்கள்

076 4608868 - ஓய்வுபெற்ற அதிகாரிகள், அவர்களின் துணைவர்கள் மற்றும் தற்போது பணிபுரியும் அதிகாரிகளின் குடும்ப உறுப்பினர்கள்

076 4608520 - ஓய்வு பெற்ற கடற்படையினர், அவர்களின் துணைவர்கள் மற்றும் தற்போது பணிபுரியும் கடற்படையினர்களின் குடும்ப உறுப்பினர்கள்