சிறப்பு படகு படையின் சின்னம் அணியும் விழா கடற்படைத் தளபதியின் தலைமையில்

கடற்படை சிறப்பு படகு படையின் 27 ஆம் ஆட்சேர்ப்பில் 03 அதிகாரிகள் மற்றும் 29 வீர்ர்களுக்கு சின்னம் அணியும் விழா 2020 செப்டம்பர் 10 ஆம் திகதி கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன தலைமையில் திருகோணமலை சிறப்பு படகு படை தலைமையகத்தில் இடம்பெற்றது.

கண்ணியமான முறையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு படகு படை வீரர்கள் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தும் பல்வேறு வகையான பயிற்சிகள் மற்றும் காட்சிகள் இடம்பெற்றன. அதன் படி இந்த பயிற்சியின் போது சிறந்து விளங்கியவர்களுக்கு கடற்படைத் தளபதியால் சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன. ஒட்டுமொத்த பாடங்களில் அதிக மதிப்பெண் பெற்ற துணை லெப்டினன்ட் ஜே.ஏ.டி.சி ஜெயநாயக்க, மிகச் சிறந்த சிறப்பு படகு படை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். மேலும், துணை லெப்டினன்ட் எம்.ஆர்.எச். பெரேரா அனைத்து பாடங்களிலும் அதிக மதிப்பெண் பெற்ற மற்றும் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதுகளைப் பெற்றார். இதற்கிடையில், சாதாரண வீரர் டப்.எம்.டி.டி திசாநாயக்க சிறந்த உடற்பயிற்சி உறுப்பினராக கடற்படைத் தளபதியிடமிருந்து கோப்பையைப் பெற்றார்.

இந்த விழாவில் பயிற்சியினை முடித்த கடற்படையினர்களை உரையாற்றிய கடற்படை தளபதி, " பயமில்லாமல் நம்பிக்கையுடன் நோக்கத்துக்கு " என்ற குறிக்கோளைக் கொண்டு தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு பாதுகாப்பதற்காக சிறப்பு படகு படை எப்போதும் தயாராக உள்ளது என்றும். அதே போன்ற மூன்று தசாப்தங்களாக இருந்த பயங்கரவாதம் தாய்நாட்டின் ஒலிப்பதுக்கு அவர்களால் சிரந்த நடவடிக்கைகள் செய்யப்பட்டது என்றும் எப்போதும் நல்ல பயிற்சி மற்றும் உயர் ஒழுக்கத்துடன் எந்த போர் சந்பவத்திலும் வான் ,நீர், பூமி முலுவதும் கடுமையான மன மற்றும் உடல் வலிமையின் எதிரியை ஆச்சரியமாக்கும் பாரிய தாக்குதல் நடத்த அரிதான திறனை இந்த சிறப்பு படகு படைக்கு உள்ளது. என்றும் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன, கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி, சிறப்பு படகு படையின் கட்டளை அதிகாரி, கடற்படை தலைமையகம் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் மூத்த அதிகாரிகள் மற்றும் பயிற்சியினை முடித்த கடற்படையினர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.