இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தலைமை அதிகாரியை சந்திப்பு

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேப்டன் விகாஸ் சூட்(Captain Vikas Sood), 2020 செப்டம்பர் 29 ஆம் திகதி கடற்படை தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் கபில சமரவீரவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

அங்கு இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை கடற்படையின் புதிய தலைமை அதிகாரியாக பதவியேற்ற ரியர் அட்மிரல் கபில சமரவீரவுக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். கேப்டன் விகாஸ் சூத் மற்றும் தலைமை அதிகாரி ஆகியோரிடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் கலந்துரையாடபட்டன.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்கள் பரிமாற்றமும் நடைபெற்றது.