புதிய விமானப் படை தளபதி கடற்படை தளபதியுடன் சந்திப்பு

புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கை விமானப்படையின் 18 வது விமானப்படை தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை இன்று கடற்படைத் தலைமையகத்தில் (நவம்பர், 04) சந்தித்தார்.

கடற்படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த புதிய விமானப் படை தளபதிக்கு கடற்படை மரபுகளின்படி மரியாதை செலுத்தப்பட்டதுடன் கடற்படையின் துனை தலைமை அதிகாரியும், மேற்கு கடற்படைத் தளபதியுமான ரியர் அட்மிரல் சுமித் வீரசிங்க அவர்களால் அவரை அன்புடன் வரவேற்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கடற்படையின் தலைமை அதிகாரி உட்பட நிர்வாக சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விமானப்படை தளபதியாக கடமைகளை ஏற்றுக்கொண்ட பின்னர் ஏயார் மார்ஷல் சுதர்சன பத்திரன கடற்படை தலைமையகத்திற்கு வந்த முதல் தடைவை இதுவாகும். கடற்படைத் தளபதியுக்கும் விமானப்படைத் தளபதியுக்கும் இடையிலான நல்லுறவு கலந்துரையாடலுக்குப் பிறகு, கடற்படைத் தளபதி விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்ஷன பத்திரனவுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதி மற்றும் விமானப்படைத் தளபதி நினைவு சின்னங்கள் பரிமாறிக்கொண்டனர்.