கொழும்பு கடற்படை பயிற்சியின் (CONEX) மூன்றாவது தொகுதி தொடங்கப்பட்டது

இலங்கை கடற்படை மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்யும் கொழும்பு கடற்படை பயிற்சி - 2021 (Colombo Naval Exercise –CONEX 21) தொடக்க விழா இன்று (2021 பிப்ரவரி 07) இலங்கை கடற்படைக் கப்பல் சயுரலவில் நடைபெற்றது. குறித்த கடற்படை பயிற்சி 2021 பிப்ரவரி 08 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரை கொழும்பு கடல் பகுதியை மையமாகக் கொண்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளதுடன் திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் பயிற்றுவித்தல் மற்றும் சீராக செயல்படுத்துதல் ஆகியவற்றைக் கண்காணிக்கும் பொறுப்பு அடுத்த மூன்று நாட்களில் கடற்படை வெளியீட்டு கட்டளைக்கு வழங்கப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டில் முதல்முறையாக தொடங்கப்பட்ட இந்த கடற்படை பயிற்சி 2020 ஆம் ஆண்டிலும் வெற்றிகரமாக கடற்படை நடத்தியது. இலங்கை கடற்படை வெளியீட்டு கட்டளையில் ரியர் அட்மிரல் பண்டார ஜெயதிலகவின் தலைமையில் மூன்றாவது கடற்படை பயிற்சியின் தொடக்க விழா இன்று கொழும்பில் நடைபெற்றது.

இலங்கை கடற்படைக் கப்பல்கள் மற்றும் படகுகளின் பங்களிப்புடன் ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்தப் பயிற்சி, எந்தவொரு செயல்பாட்டு சவாலுக்கும் கடற்படைக் கப்பல் குழுவைத் தயாரிப்பதையும், நாட்டின் முதல் பாதுகாப்பு வளையத்தைக் காக்கும் கடற்படை அதிகாரிகள் மற்றும் மாலுமிகளின் தொழில் திறனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், இந்த பயிற்சியானது கூட்டு கடற்படை மற்றும் விமானப் பயிற்சிகளைக் கொண்டுள்ளது, இலங்கை கடற்படைக்கும் இலங்கை விமானப்படைக்கும் இடையிலான கூட்டு நடவடிக்கைகளில் உயர் மட்ட தொடர்புகளை ஏற்படுத்த இந்த 'கொழும்பு கடற்படை பயிற்சி - 2021' மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

காணக்கூடிய எதிரி இல்லை என்றாலும், இந்தியப் பெருங்கடல் பகுதி முழுவதும் இலங்கையின் கடல் பகுதியைப் பாதிக்கும் பாரம்பரிய மற்றும் பாரம்பரியமற்ற கடல் அச்சுறுத்தல்கள் (திருட்டு, கடல் பயங்கரவாதம், ஆயுதக் கடத்தல், மனித கடத்தல், சட்டவிரோத அறிக்கையிடல் மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்வள நடவடிக்கைகள்) ஆகியவை நடைபெறுகின்றன. இவ்வாரான கூட்டுப் பயிற்சிகள் மூலம் பெறுகின்ற அறிவும் அனுபவமும் வரம்பில்லாமல் எழும் எந்தவொரு சவாலையும் நிர்வகிக்க பெரிதும் உதவும். கொழும்பு, கடற்படை கடல் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் (MRCC) ஒருங்கிணைப்பின் கீழ் இலங்கை தேடல் மற்றும் மீட்பு மண்டலத்தில் துன்பகரமான மீன்பிடி மற்றும் கடல்சார் சமூகத்திற்கு நிவாரணம் வழங்குவதில் எதிர்கால செயல்பாட்டு வெற்றிக்கு சாதகமான தாக்கத்தை இந்த பயிற்சிகள் மூலம் ஏற்படுத்தும்.

இலங்கை கடற்படையின் ஆழ்கடல் கண்காணிப்புக் கப்பல்களான இலங்கை கடற்படை கப்பல் சயுரல, சயுர, சிந்துரல, சமுதுர வேக தாக்குதல் கப்பல்களான, இலங்கை கடற்படை கப்பல் சுரனிமில மற்றும் நந்திமித்ர, பே கிலாஸ் (Bay Class) வகையில் ரோந்து கப்பல்களான மிஹிகத மற்றும் ரத்கதீப துரித தாக்குதல் கப்பலான உதார உட்பட 4 வது படைப்பிரிவைச் சேர்ந்த 08 துரித தாக்குதல் படகுகள் இந்த பயிற்சியில் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த பயிற்சியில் இலங்கை கடலோர காவல்படையின் சுரக்‌ஷா, சமுத்ராரக்ஷா மற்றும் சமாரக்ஷா கப்பல்கள் இலங்கை விமானப்படையின் எம்ஐ -17, பெல் 412, பெல் 212 ஹெலிகாப்டர்கள் மற்றும் B -200 king air கண்காணிப்பு விமானமொன்றும் கழந்து கொள்ளும்.

தற்போதுள்ள கோவிட் 19 பாதிப்புக்குள்ளான சூழ்நிலையை எதிர்கொண்டு வைரஸ் பரவுவதைத் தடுக்க சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களின்படி இந்த கடற்படைப் பயிற்சியை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடற்படை நடவடிக்கைகளின் பணிப்பாளர் நாயகம், ரியர் அட்மிரல் பிரசன்ன மகவிதான, 4 வது துரித தாக்குதல் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி, குறித்த பயிற்சியில் பங்கேற்கும் அனைத்து கப்பல்களின் கட்டளை அதிகாரிகள், சிறப்பு படகுகள் படையின் கட்டளை அதிகாரி, இலங்கை கடலொர காவல்படையின் நடவடிக்கைகளின் பணிப்பாளர் நாயகம் உட்பட கடற்படை அதிகாரிகள் குழு மற்றும் இலங்கை விமானப்படை அதிகாரிகள் குழுவும் கலந்து கொண்டனர்.