ரியர் அட்மிரால் டி.கே.பி தசநாயக்க கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்

33 ஆண்டுகளுக்கும் மேலான தனது புகழ்பெற்ற கடற்படை சேவையிலிருந்து ரியர் அட்மிரல் டி.கே.பி தசநாயக்க இன்று (2021 பிப்ரவரி 16) ஓய்வு பெற்றார்.

இன்று தனது 55 வது பிறந்த நாளைக் கொண்டாடும் ஓய்வுபெற்ற மூத்த அதிகாரிக்கு கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன உட்பட பணிப்பாளர் நாயகர்கள் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன்பிறகு, அவருக்காக கடற்படைச் சம்பிரதாய முறைப்படி மரியாதை வழங்கப்பட்டதுடன் கடற்படை பாரம்பரியத்தின் படி சாலையின் இருபுறமும் உள்ள மூத்த மற்றும் இளைய கடற்படை வீரர்கள் அவருக்கு பிரியாடை செலுத்தினர்.

1987 ஆம் ஆண்டில் கடற்படையில் சேர்ந்த ரியர் அட்மிரல் டி.கே.பி தசநாயக்க, கடற்படை ஊடக ஒருங்கிணைப்பாளராக 2006 ஜனவரி முதல் 2009 ஆகஸ்ட் வரை பணியாற்றினார், கடற்படை ஆராய்ச்சி பிரிவின் இயக்குநராகவும், சைபர் பாதுகாப்பு பிரிவு இயக்குநராகவும், பாதுகாப்புப் படைத் தலைவரின் அலுவலகத்தில் ஆயுதப்படைகளின் ஒருங்கிணைப்பு இயக்குநராகவும், கடற்படை உணவு மற்றும் சீருடைகள் இயக்குநர், பேரிடர் மேலாண்மை மையத்தில் முப்படைகளின் ஒருங்கிணைப்பு அதிகாரி, இயக்குநர் வழங்கல் மேலாண்மை அமைப்பு மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளையின் தளபதி ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்தார்.