வைத்தியசாலை பணி பகிஷ்கரிப்பின் போது அத்தியவசிய சேவைகளுக்கு கடற்படையின் உதவி

வைத்தியசாலை சிற்றூழியர்களின் பணி பகிஷ்கரிப்பு காரணத்தினால் பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற சிரமத்தைத் தவிர்க்க கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் அறிவுறுத்தலின் பேரில் இலங்கை கடற்படையின் கடற்படை மருத்துவப் பிரிவு உறுப்பினர்கள் உட்பட கடற்படையினர் நாட்டின் பல பகுதிகளில் வைத்தியசாலைகளின் நடவடிக்கைகளுக்கு ஈடுபடுத்தப்பட்டனர்.

2021 பிப்ரவரி 24 அன்று வைத்தியசாலை சிற்றூழியர்கள் தொடங்கிய வேலைநிறுத்தத்தின் விளைவாக, அரசு வைத்தியசாலைகளின் செயல்பாடுகளைத் தொடர ஆயுதப்படைகளின் உறுப்பினர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அதன்படி, கடற்படை மருத்துவ உதவியாளர்கள் உட்பட 89 கடற்படை வீரர்கள் வெலிசர மார்பு வைத்தியசாலை, மஹவ வைத்தியசாலை, நீர்கொழும்பு வைத்தியசாலை, காலி மகாமோதர வைத்தியசாலை, உடுகம வைத்தியசாலை, எல்பிட்டிய வைத்தியசாலை, பலபிட்டிய வைத்தியசாலை, தெபரவெவ வைத்தியசாலை மற்றும் தங்காலை வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

மேலும், நாட்டில் ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படை எப்போதும் தயாராக உள்ளது.