மண்டைதீவு ரோமன் கத்தோலிக்க கல்லூரியில் இலங்கை கடற்படையின் அனுசரணையுடன் கட்டப்பட்ட பாடசாலை கட்டிடம் கல்லூரி மானவர்களிடம் கையளிக்கப்பட்டது

யாழ்ப்பாணம் மண்டைதீவு ரோமன் கத்தோலிக்க கல்லூரியின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடம் இன்று (2021 ஆகஸ்ட் 01) கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

இலங்கை கடற்படையின் 70 வது ஆண்டு நிறைவை ஒட்டி, இந்த கடற்படை சமூக பொறுப்புணர்வு திட்டம் 19 ஏப்ரல் 2021 அன்று கடற்படை தளபதியின் கருத்துப்படி தொடங்கப்பட்டது. ஒவ்வொரு கடற்படை கட்டளையிலும், குறைந்த வசதிகள் உள்ள பாடசாலைகளில் படிக்கும் பாடசாலை மாணவர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்துவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

வடக்கு கடற்படை கட்டளையால் அபிவிருத்திக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட யாழ்ப்பாணம், மண்டைதீவு ரோமன் கத்தோலிக்க கல்லூரியை ஆய்வு செய்ய கடற்படைத் தளபதி 2021 ஏப்ரல் 03 ஆம் திகதி விஜயமொன்று மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, பாடசாலையின் முதல்வர் ஒரு கணினி ஆய்வகத்திற்கு மற்றும் ஒரு நூலகத்திற்கு தேவையான புதிய இரண்டு மாடி கட்டிடத்தின் மற்றும் வகுப்பறைகளை பழுதுபார்ப்பதன் அவசியத்தை முன்வைத்தார். அதன்படி, மிகக் குறுகிய காலத்தில் முடிக்கப்பட்ட நூலகம் மற்றும் கணினி ஆய்வகத்திற்கான இரண்டு மாடி கட்டிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட வகுப்பறை கட்டிடம் ஆகியவை இன்று திறக்கப்பட்டு மாணவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கணினி ஆய்வகத்திற்குத் தேவையான 10 கணினிகள், கணினி மேசைகள் மற்றும் கணினி நாற்காலிகள் மற்றும் பள்ளிக்கு விளையாட்டு உபகரணங்கள் கடற்படை சேவா வனிதா பிரிவால் வழங்கப்பட்டன.

மண்டைதீவு புனித அந்தோனியார் தேவாலய போதகர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மண்டைதீவு ரோமன் கத்தோலிக்க கல்லூரிக்கு கடற்படைத் தளபதியை அன்புடன் வரவேற்றனர். இந்நிகழ்வில் கருத்துத் தெரிவித்த கடற்படைத் தளபதி, கடற்படையின் 70 -வது ஆண்டு நிறைவு விழாவை ஒட்டி ஒவ்வொரு கடற்படை கட்டளையின் கீழ் செயல்பட்டு வரும் பாடசாலை அபிவிருத்தி திட்டத்தை முன்னிலைப்படுத்தி, குறைந்த வசதி கொண்ட பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தம் என்று கூறினார். மேலும், கடற்படையின் அனைத்து கடற்படை வீரர்களும் இந்த திட்டத்தின் வெற்றிக்கு தானாக முன்வந்து தங்கள் மாதாந்திர சம்பளத்தில் இருந்து நிதியுதவி அளித்துள்ளனர் மற்றும் கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் மனிதவள பங்களிப்புடன் இந்த திட்டத்தை விரைவாக முடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் அனைத்து கடற்படை கட்டளைகளையும் உள்ளடக்கி மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும், கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட இந்த மாபெரும் திட்டத்தைப் பாராட்டி, கல்லூரியின் மாணவர்கள், கல்லூரியின் முதல்வர் மற்றும் ஊழியர்கள் கடற்படை தளபதி உட்பட முழு கடற்படைக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தனர்.

கொவிட்-19 வழிமுறைகளை கடைபிடித்து நடத்தப்பட்ட இந்த நிகழ்வுக்காக யாழ் பேராயரும் மண்டைதீவு தீவில் கத்தோலிக்க தேவாலயத்தின் பாதிரியாருமான கலாநிதி. ஜஸ்டின் ஞானபிரகாசம், வடக்கு கடற்படை கட்டளையகத்தின் கட்டளைத்தளபதி ரியர் அட்மிரல் பிரியந்த பெரேரா, மாகாண கல்வி, இளைஞர்கள், விளையாட்டு பிரிவின் செயலாளர், சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மற்றும் பாடசாலை அதிபர், ஆசிரியர், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும், இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, கடற்படைத் தளபதி நாகதீப ராஜமஹா விஹாராயாவிற்கு மரியாதை செலுத்தி நாகதீப பழங்கால ராஜமஹா விகாரையின் முதன்மை, வட மாகாணத்தின் தலைமைத் தலைவர் மிகவும் மரியாதைக்குரிய நவதகல பதுமகித்தி திஸ்ஸ தேரர் சந்தித்து ஆசி பெற்றார். அதன் பின் விஹாரயவில் மற்றும் நயினாதீவு பிரதேச வைத்தியசாலையில் கடற்படையால் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்யவும் கழந்து கொண்டார்.