பூஸ்ஸ இடைநிலை சிகிச்சை மையத்திற்கு பல உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டன

இலங்கை கடற்படையினரால் நிர்வகிக்கப்படுகின்ற பூஸ்ஸ கொவிட் 19 இடைநிலை சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு தேவையான ‘சுடு நீர் ஆவியாதல்’ உபகரணங்கள் தெற்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் பிரசன்ன ஹேவகேவிடம் ஒப்படைக்கும் நிகழ்வு 2021 செப்டம்பர் 17 ஆம் திகதி காலி பிஷப் ரேமன் விக்ரமசிங்கவின் தலைமையில் காலி கலுவெல்ல தேவாலயத்தில் இடம்பெற்றது.

அதன் படி, கொவிட் 19 நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கத் தேவையான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான அரசின் முயற்சிகளுக்கு ஆதரவாக பூஸ்ஸ இலங்கை கடற்படை கப்பல் நிபுன நிறுவனத்தில் கடற்படையால் நிறுவப்பட்ட கோவிட் -19 இடைநிலை சிகிச்சை மையத்திற்கு பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் நிதி மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். அதன்படி, அமெரிக்காவின் நியூஜெர்சி பிராந்தியத்தில் இருக்கும் தென் மாகாண கத்தோலிக்க தேவாலயத்தின் பிஷப் மரியாதக்கூறிய ரேமன் விக்கிரமசிங்கவின் நண்பரொருவர் மூலம் பூஸ்ஸ கோவிட் -19 இடைநிலை சிகிச்சை மையத்திற்கு வழங்குவதுக்காக வழங்கப்பட்ட 50 ‘சுடு நீர் ஆவியாதல்’ உபகரணங்கள் தெற்கு கடற்படை கட்டளையின் தளபதியிடம் ஒப்படைக்கும் நிகழ்வு 2021 செப்டம்பர் 17 ஆம் திகதி காலி கலுவெல்ல தேவாலயத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தெற்கு கடற்படை கட்டளையின் கட்டளை மருத்துவ அதிகாரி உட்பட குறைந்த எண்ணிக்கையிலான மக்கள் கலந்து கொண்டனர்.