நிகழ்வு-செய்தி

இலங்கைக்கான தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்த பங்களாதேஷ் கடற்படை தளபதி இலங்கை விட்டு புறப்பட்டார்

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2022 ஜனவரி 18 ஆம் திகதி இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் கடற்படை தளபதி அட்மிரல் எம் ஷஹீன் இக்பால் (Admiral, M Shaheen Iqbal) அவர்கள் தனது உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து இன்று காலை (2022 ஜனவரி 23) இலங்கை விட்டு புறப்பட்டார்.

23 Jan 2022

ரியர் அட்மிரல் சமன் பெரேரா கடற்படை ஏவுகணை கட்டளையின் புதிய கொடி அதிகாரியாக கடமைகளை ஏற்றுக்கொண்டார்

கடற்படை ஏவுகணை கட்டளையின் புதிய கொடி அதிகாரியாக ரியர் அட்மிரல் சமன் பெரேரா 2022 ஜனவரி 20 ஆம் திகதி திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில் உள்ள கடற்படை வெளியீட்டு கட்டளை அலுவலகத்தில் வைத்து கடமைகளை ஏற்றுக்கொண்டார்.

21 Jan 2022

இலங்கை தொண்டர் கடற்படையின் வருடாந்த முகாம் வெற்றிகரமாக நிறைவு

இலங்கை தொண்டர் கடற்படையின் வருடாந்த முகாம் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் இன்று (2022 ஜனவரி 20) வெலிசர இலங்கை கடற்படை கப்பல் லங்கா நிருவனத்தில் இடம்பெற்றது.

20 Jan 2022

பங்களாதேஷ் கடற்படை தளபதி இலங்கை கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2022 ஜனவரி 18 ஆம் திகதி இலங்கை வந்துள்ள பங்களாதேஷ் கடற்படை தளபதி அட்மிரல் எம் ஷஹீன் இக்பால் (Admiral, M Shaheen Iqbal) இன்று (2022 ஜனவரி 19) கடற்படைத் தலைமையகத்தில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்தார்.

19 Jan 2022

இலங்கை தொண்டர் கடற்படையின் வருடாந்த பயிற்சி முகாமிற்கு இணையாக கரையோர சுத்திகரிப்பு திட்ட மொன்று மேற்கொள்ளப்பட்டது

இலங்கை தொண்டர் கடற்படையின் வருடாந்த பயிற்சி முகாமுடன் இணைந்து ஒழுங்கமைக்கப்பட்ட கரையோர சுத்திகரிப்பு நிகழ்ச்சியொன்று 2022 ஜனவரி 9 ஆம் திகதி உஸ்வெடகையாவ கடற்கரையில் நடத்தப்பட்டது.

10 Jan 2022

கடற்படைத் தளபதி வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்

வடக்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்ட கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்ன 2022 ஜனவரி 08 மற்றும் 09 ஆம் திகதிகளில் வடக்கு கடற்படை கட்டளையின் செயற்பாட்டுத் தயார்நிலை மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளை மேற்பார்வையிட்டார்.

10 Jan 2022

243 ஆம் ஆட்சேர்ப்பின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்த 364 கடற்படையினரின் வெளியேறல் அணிவகுப்பு

இலங்கை நிரந்தர மற்றும் தொண்டர் கடற்படையின் 243 ஆம் ஆட்சேர்ப்புக்கு சொந்தமான 364 கடற்படை வீரர்கள் அவர்களின் அடிப்படை பயிற்சியை பூர்த்தி செய்து 2022 ஜனவரி 08 ஆம் திகதி பூனாவை கடற்படை கப்பல் சிக்ஷா நிருவனத்தில் நடந்த அணிவகுப்பு வைபவத்தின் போது வெளியேறிச் சென்றனர்.

09 Jan 2022

இலங்கை கடற்படை கப்பல் ‘தம்மென்னா’ நிருவனம் தனது 26 வது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது

2022 ஜனவரி 01 ஆம் திகதி ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிறுவனத்தின் 26 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு 2022 ஜனவரி மாதம் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் இரவு முழுவதும் பிரித் ஓதுதல் மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்வு குறித்த நிறுவன வழாகத்தில் இடம்பெற்றது.

06 Jan 2022

கடற்படை பொது வைத்தியசாலைக்கு மருத்துவ உபகரணங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டது

வெலிசர கடற்படை வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட ஒரு ICU Ventilator இயந்திரம் மற்றும் இரண்டு Digital BP Monitor இயந்திரங்கள் (02) கொமான்டர் (ஓய்வு) எல்.பீ.கே ஹேவகேவினால் குறித்த வைத்தியசாலைக்கு வழங்கவதுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவிடம் அடையாளமாக ஒப்படைக்கும் நிகழ்வு இன்று (2022 ஜனவரி 05) கடற்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

05 Jan 2022

கடற்படை 'P-601' கப்பலை உத்தியோகபூர்வமாக இலங்கை கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தது

இலங்கை கடற்படைக் கப்பல் குழுவில் இணைக்கப்பட்டு சுமார் நான்கு தசாப்தங்களாக கடற்படையின் விலைமதிப்பற்ற சேவையில் ஈடுபட்ட பின் 2021 செப்டம்பர் 30 ஆம் திகதி கடற்படை சேவையிலிருந்து விடைபெற்ற இலங்கை கடற்படை கப்பல் ஜயசாகர (P 601) 2022 ஜனவரி 03 ஆம் திகதி தெற்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்ற விழாவின் போது இலங்கை கடலோர காவல்படையிடம் சம்பிரதாயமாக கையளிக்கப்பட்டுள்ளது.

04 Jan 2022