பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபேத் மகாராணியின் மறைவுக்கு இலங்கை கடற்படையின் அஞ்சலி

பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபேத் மகாராணியின் 70 ஆண்டுகால ஆட்சிக் காலத்தின் போது இலங்கை கடற்படையின் படிப்படியான வளர்ச்சிக்காக பிரித்தானிய அரச கடற்படையால் வழங்கப்பட்ட நீண்டகால ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்பின் வரலாற்றை நினைவுகூறும் நிலையில், 2022 செப்டெம்பர் 08 ஆம் திகதி காலமான இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு இலங்கை கடற்படை தனது உயரிய அஞ்சலியை செலுத்துகிறது.

இரண்டாம் எலிசபெத் மகாராணி, 1954 ஆம் ஆண்டில் எஸ்.எஸ் கொதிக் (‘SS Gothic’) கப்பலில் அவருடைய கணவரான இரண்டாம் உலகப் போரில் பிரித்தானிய அரச கடற்படையின் மத்தியதரைக் கடற்படையில் (Mediterranean Fleet) அதிகாரியாகப் பணியாற்றிய போது இலங்கையில் பணிபுரிந்த பிரித்தானிய எடின்பர்க் பிரபு இளவரசர் பிலிப்புடன் இலங்கைக்கு வந்துள்ளதுடன் இந்த விஜயத்தின் போது, கொழும்பு துறைமுகத்தில் உள்ள ஒரு ஜெட்டிக்கு ‘ராணி எலிசபெத் குவே’ (Queen Elizabeth Quay) என பெயரிடப்பட்ட ஒரு விழாவிற்கு கலந்து கொண்டுள்ளார்.

அங்கு அரச தம்பதிகளை ஏற்றிச் சென்ற ‘எஸ்.எஸ்.கொதிக்’ என்ற கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு வந்தபோது, அப்போதைய இலங்கை அரச கடற்படையின் ‘விஜய’ கப்பல் பாதுகாப்பு வழங்கியதுடன், அரச இலங்கை கடற்படையினர் ராணியை கௌரவத்துடன் வரவேற்றனர். பின்னர், அரச தம்பதியினர் 'விஜய' கப்பலில் கண்கானிப்பு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளதுடன் அன்று கடற்படைத் தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள் இல்லத்தில் இளவரசர் பிலிப்பிற்கு சிறப்பு இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், 1955 ஆம் ஆண்டில், இளவரசர் பிலிப் 'பிரிட்டானியா' (HMY ‘Britannia’) கப்பலின் இலங்கைக்கு வந்தபோது, றோயல் சிலோன் கடற்படை அவருக்கு கடற்படைத் தலைமையக அதிகாரியின் இல்லத்தில் விருந்து அளித்தது.

1950 டிசம்பர் 09 ஆம் திகதி ராயல் சிலோன் நேவி நிறுவப்பட்டதன் மூலம், ராயல் சிலோன் நேவி கப்பல்களின் பெயர்களுக்கு முன் மகாராணியின் இலங்கை கப்பல்கள் (Her Majesty’s Ceylon Ship- HMCyS) என்று பெயரிடப்பட்டது, மேலும் 1972 இல் இலங்கை குடியரசாக மாறிய பிறகு, இந்த பயன்பாடு 'இலங்கை கடற்படை கப்பல்கள்' (Sri Lanka Naval Ship – SLNS) என்று மாற்றப்பட்டது.

சர்வஜன வாக்குரிமையின் 50 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கவும், விக்டோரியா அணையின் கட்டுமானப் பணிகளை ஆய்வு செய்யவும் பிரித்தானிய மகாராணி 1981 ஆம் ஆண்டில் இரண்டாவது தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்தார். 1954 ஆம் ஆண்டில் முதன்முதலாக இலங்கைக்கு வந்தபோது, இலங்கை கடற்படையினரால் மகாராணியகௌரவிக்கப்பட்டது.

மேலும், பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபேத் மகாராணியின் தந்தை, கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் ராயல் கடற்படையில் பணியாற்றியதால் ஒரு மகளாக, மனைவியாக மற்றும் தாயாக அவர் கடற்படையுடன் சிறப்புப் பிணைப்பைக் கொண்டுள்ளதாக பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் கொடி கப்பலான 'எச்எம்எஸ் குவீன் எலிசபேத் (HMS Queen Elizabeth) அதிகாரமலிக்கும் விழாவின் போது கூறினார்.

அதன்படி, இலங்கை கடற்படையின் பெருமைமிக்க மற்றும் நீண்ட வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும் போது, பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் 70 ஆண்டுகால ஆட்சிக் காலத்தில் பிரித்தானிய அரச கடற்படையின் பங்களிப்பு, இந்நாட்டில் கடற்படையின் தொடக்கத்தை மற்றும் படிப்படியாக மாற்றமடைந்ததை குறிக்கும். பிரித்தானியாவின் மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இலங்கை கடற்படை மிகுந்த மரியாதையுடன் இதை நினைவுகூருகிறது.

1954 ஆம் ஆண்டு இத்தீவிற்கு விஜயம் செய்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு கொழும்பு துறைமுகத்தில் நடைபெற்ற அரச மரியாதை வழங்கும் நிகழ்வு

இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோர் விஜய கப்பலில் கண்காணிப்பு விஜயமொன்று மேற்கொண்டனர்

இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோர் விஜய கப்பலில்

இரண்டாம் எலிசபெத் மகாராணி மற்றும் இளவரசர் பிலிப் ஆகியோர் கண்காணிப்பு விஜயத்திற்குப் பிறகு விஜய கப்பலை விட்டு வெளியேறினர்

கௌரவ திரு. எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் கடற்படைத் தளபதி கொமடோர் ஜி.ஆர்.எம். த மெல் ஆகியோர் 1955 இல் கடற்படைத் தலைமையகத்தில் உள்ள அதிகாரிகள் அலுவலகத்திற்குச் சென்ற இளவரசர் பிலிப் அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்

விஜய கப்பலின் முதல் அதிகாரி குழு (லெப்டினன்ட் ஆர் கதிர்காமர் (கட்டளை அதிகாரி), லெப்டினன்ட் ஈ சண்முகரத்தினம், லெப்டினன்ட் டி வி ஹண்டர், லெப்டினன்ட் ஏ கல்தேரா, லெப்டினன்ட் ஆர் புரோக்டர் மற்றும் சப் லெப்டினன்ட் ஈ ஒயிட்)

1981 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம், பிரித்தானியாவின் இரண்டாம் எலிசபெத் மகாராணி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமூடாக தீவு வந்தடைந்தபோது, அரச மரியாதை வழங்கும் நிகழ்வு காண்கானிப்பதற்காக பாதுகாப்புப் படையின் பொறுப்பதிகாரியான லெப்டினன்ட் கமாண்டர் டி.கே.தசநாயக்க தயாராக இருந்தார்

பாதுகாப்புப் படையின் பொறுப்பதிகாரியான லெப்டினன்ட் கமாண்டர் டி.கே.தசநாயக்க மற்றும் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் ஏ.டப்.எச்.பெரேராவினால் இரண்டாம் எலிசபெத் மகாராணியுடன் மரியாதை வழங்கும் நிகழ்வு காண்கானிப்பதற்காக உடன் செல்கிறார்

இரண்டாம் எலிசபெத் மகாராணி மரியாதை வழங்கும் நிகழ்வு காண்கானித்தார்

இரண்டாம் எலிசபெத் மகாராணி மரியாதை வழங்கும் நிகழ்வு காண்கானித்தார்

இரண்டாம் எலிசபெத் மகாராணியை வரவேற்கும் முகமாக மரியாதை செலுத்தியமைக்காகவும், சிறப்பாக நடத்தப்பட்டதற்காகவும் அதிமேதகு ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தன அவர்களால் கடற்படைத் தளபதிக்கு பாராட்டுக் கடிதம் வழங்கப்பட்டது