ஐக்கிய இராச்சியத்தின் பிரதான நீர்வியலாளர் கடற்படைத் தளபதியுடன் சந்திப்பு

ஐக்கிய இராச்சியத்தின் பிரதான நீர்வியலாளர் (National Hydrographer of the United Kingdom) ரியர் அட்மிரல் ரெட் ஹட்சர் (Rear Admiral Rhett Hatcher) உள்ளிட்ட குழுவினர் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை 2022 நவம்பர் 08 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தனர்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், ரியர் அட்மிரல் ரெட் ஹட்சர் (Rear Admiral Rhett Hatcher) மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஆகியோருக்கு இடையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சிநேகபூர்வ கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. மேலும், இலங்கை கடற்படையின் பிரதான நீர்வியலாளர் மற்றும் அரசாங்கத்தின் கூட்டு நீர்மானி ரியர் அட்மிரல் பிரசாத் காரியப்பெரும மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் போல் கிளேட்டன் (Colonel Paul Clayton) ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வைக் குறிக்கும் வகையில் கடற்படைத் தளபதி மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் பிரதான நீர்வியலாளர் ஆகியோருக்கு இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.