2024 தேசிய சூப்பர் லீக் பேஸ்பால் சாம்பியன்ஷிப்பில் கடற்படை இரண்டாம் இடத்தைப் பிடித்தது

இலங்கை பேஸ்பால் சங்கம் ஏற்பாடு செய்த 2024 தேசிய சுப்பர் லீக் பேஸ்பால் சாம்பியன்ஷிப், 2024 மே 10 , 11 ஆம் திகளில் இலங்கையின் டயகமவில் உள்ள ஜப்பான் நட்புறவு பேஸ்பால் மைதானத்தில் நடைபெற்றது, இதில் கடற்படை ஆண்கள் பேஸ்பால் அணி இரண்டாம் நிலை பட்டத்தை வென்றது.

பல பிரபல பேஸ்பால் அணிகள் பங்குபற்றிய இந்தப் போட்டியில் கடற்படை ஆண்கள் பேஸ்பால் அணி 19 அணிகளை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. அங்கு இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான இறுதிப் போட்டியில் கடற்படை ஆடவர் பேஸ்பால் அணி 04 - 03 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டதுடன், போட்டியின் சிறந்த பந்து காப்பாளராக கடற்படை வீரர் கப்டன் வை.டி.புஷ்பகுமார மற்றும் சிறந்த போட்டியின் பந்துகளை அனுப்பியவராக பணியாற்றிய கடற்படை வீரர் களுஆராச்சி அங்கு கோப்பையை வென்றார்.