அவுஸ்திரேலியாவில் இருந்து இத்தாலி நோக்கி பயணித்த சொகுசு பயணிகள் கப்பலில் பணியாற்றிய இலங்கையரை பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர கடற்படை உதவி

சர்வதேச பயணிகள் கப்பலான MSC Magnifica கப்பலில் பணியாற்றிய ஒரு இலங்கையர் தன்னை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருமாறு சமூக ஊடகங்கள் மூலம் கோரியிருந்தார், அதன்படி அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் ஒப்புதலின் கீழ் மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வாவின் மேற்பார்வையின் கீழ் கடற்படை இன்று (ஏப்ரல் 06, 2020) குறித்த இலங்கையரை பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளது.

2020 ஜனவரி 05 ஆம் திகதி சுமார் 2700 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் கடல் சுற்றுப்பயணத்திற்காக புறப்பட்ட இந்த கப்பல் உலகளாவிய கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பயணத்தை ஆஸ்திரேலியாவில் நிறுத்தியது. இந்த கப்பலை வேறு எந்த நாட்டினாலும் ஏற்றுக்கொள்ளப்படாததால், தாய் நிறுவனம் அமைந்துள்ள இத்தாலி நோக்கி பயணம் செய்துள்ளது.

கப்பல் இத்தாலிக்குச் செல்லும்போது எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசிய சேவைகளைப் பெறுவதற்காக கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் நங்கூரமிடும் சந்தர்ப்பத்தில் தன்னை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருமாறு கப்பலில் பணியாற்றிய ஒரே இலங்கையரான அனுர பண்டார ஹெரத், சமூக ஊடகங்கள் மூலம் ஜனாதிபதியுடவும் பிரதமரிமும் கேட்டுக்கொண்டார். இந்த வேண்டுகோளுக்கு அனுதாபம் தெரிவித்த அதிமேதகு ஜனாதிபதி, குறித்த நபரை பாதுகாப்பாக இலங்கைக்கு அழைத்து வர வேண்டும் என்று கடற்படைத் தளபதியிடம் தெரிவித்தார். அதன் படி இன்று (2020 ஏப்ரல் 6) அதிகாலையில் கொழும்பு துறைமுகத்திற்கு 4.4 மைல்கள் (09 கி.மீ) தூரத்தில் குறித்த கப்பலை நெருங்கிய கடற்படை வேதியியல், உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி (Chemical, Biological, Radiological and Nuclear)அவசரநிலை பதிலளிக்கும் பிரிவினர் இலங்கையரை பாதுகாப்பாக கொழும்பு துறைமுகத்திற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும், இந்த பயணிகள் கப்பலில் இதய நோயாளியாக இருந்த ரோஸ்மேரி மார்கிரெட் என்ற 75 வயதான ஜெர்மன் பெண்ணையும் கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனையடுத்து, கோவிட் 19 ஐ கட்டுபடுத்துவதற்கான ஜனாதிபதி பணிக்குழுவுக்கு தெரிவித்து குறித்த நபரயும் நோயாளியையும் அவர்களின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி துறைமுக வளாகத்தில் முழுமையாக கிருமி நீக்கம் செய்யப்பட்ட பின்னர் குறித்த நபர் பூஸ்ஸ கடற்படைத் தளத்தில் நிறுவப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட மையத்தின் 21 நாள் தனிமைப்படுத்தலுக்கும், நோய்வாய்ப்பட்ட பெண்ணை சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதுபோன்ற நிகழ்வுகளுக்குத் தயாராகும் வகையில், மார்ச் 13 ஆம் திகதி கொழும்பு துறைமுக வளாகத்தில் கடற்படை துறைமுக அதிகாரசபை மற்றும் “சுவ செரிய” இன் சுகாதார ஆம்புலன்ஸ் சேவையுடன் இணைந்து முறையான பயிற்சித் திட்மொன்று நடத்தியது. உலகின் எந்தவொரு துறைமுகமும் கப்பலை ஏற்றுக் கொள்ளாத சூழ்நிலையில், கப்பலில் இருந்த ஒரே ஒரு இலங்கையரை இவ்வாரு அழைத்து வரப்பட்டதை தொடர்பாக இலங்கையர்களாக நாங்கள் பெருமைப்பட வேண்டும்.

அதன்படி, கப்பலில் பணியாற்றிய அனுர பன்டார ஹேரத், அவரை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வந்ததற்காக அதி மேதகு ஜனாதிபதி உட்பட இலங்கை அரசுக்கும், கடற்படைக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.