இலங்கை கடற்படை கப்பல் 'வீரயா' மற்றும் 'ஜகதா' கடற்படை சேவையில் இருந்து விடைபெறுகிறது

இலங்கைக்கு சொந்தமான கடல் மண்டலத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக விலைமதிப்பற்ற சேவையின் பின்னர் கடற்படையில் இருந்து விடைபெறும் இலங்கை கடற்படையின் மூன்றாவது வேக ரோந்து படகுகள் படையின் இலங்கை கடற்படை கப்பல் 'வீரயா' மற்றும் 'ஜகதா' ஆகிய இரண்டு கப்பல்களுக்கு கடற்படை பாரம்பரியமாக மரியாதை செலுத்தி கடற்படை சேவையில் இருந்து அகற்றும் விழா 2020 அக்டோபர் 12 ஆம் திகதி திருகோணமலை கடற்படை கப்பல்துறையில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் நடைபெற்றது.

ஒரு போர்க்கப்பல் கடற்படைக்கு சேருவது நாட்டின் ஜனாதிபதியால் கையெழுத்திடப்பட்ட சிறப்பு உரிமம் மூலம் அதிகாரமளித்து செய்யப்படுகிறது, மேலும் கடற்படையிலிருந்து ஒரு போர்க்கப்பலை அகற்றுவதும் ஜனாதிபதியின் சிறப்பு ஒப்புதலுடன் செய்யப்படுகிறது. அதன்படி, 'வீரயா' மற்றும் 'ஜகதா' போர்க்கப்பல்களை அதிகாரத்திலிருந்து அகற்றுவது, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் அதி மேதகு ஜனாதிபதி மற்றும் ஆயுதப்படைகளின் தளபதியுமான கோட்டாபய ராஜபக்ஷவின் முன் அனுமதியுடன் மேற்கொள்ளப்பட்டது.

1972 ஆம் ஆண்டில், ரியர் அட்மிரல் டி.வி ஹண்டர் கடற்படைத் தளபதியாக இருந்தபோது, ‘Her Majesty’s Ceylon Ship Weeraya’ மற்றும் இலங்கை குடியரசாக மாறிய பின்னர் இலங்கை கடற்படை கப்பல் 'வீரயா' ஆக அதிகாரமளிக்கப்பட்ட பின்னர் கடற்படை சேவையில் சேர்ந்த 'வீரயா' கப்பல் அதன் பின்னர் இலங்கை கடற்படை கப்பல் குழுவுடன் சுமார் 48 ஆண்டுகள் தொடர்ந்து சேவை செய்துள்ளது. 1980 ஆம் ஆண்டில் ரியர் அட்மிரல் ஏ.டப்.எச். பெரேரா கடற்படைத் தளபதியாக இருந்தபோது அதிகாரமளிக்கப்பட்டு கடற்படை சேவைக்கு சேர்க்கப்பட்ட ஜகதா கப்பல் கடற்படையுடன் 40 ஆண்டுகளாக தொடர்ச்சியான சேவையில் ஈடுபட்டுள்ளது. இந்த இரண்டு கப்பல்களும் 1961 ஆம் ஆண்டில் சீன மக்கள் குடியரசில் தயாரிக்கப்பட்டதுடன் 1980 முற்பகுதியில் முதல் ஈலம் போர் தொடங்கியவுடன் மிகவும் பரபரப்பான இந்த கப்பல்கள் காரைநகர் தீவு கடல் பகுதியில் ஆயுதக் கடத்தல் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளை அடக்குவதில் முக்கிய பங்கு வகித்தது. இந்த கப்பல்கள் கட்டப்பட்டதிலிருந்து அரை நூற்றாண்டுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்ட பின்னர், இப்போது அது திறமையாக பயன்படுத்தக்கூடிய அதிகபட்ச நேரத்தை பூர்த்தி செய்துள்ளது.

இந்த இரண்டு போர்க்கப்பல்களும் அதிகாரத்திலிருந்து அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, கப்பலின் நீளத்திற்கு சமமாக வடிவமைக்கப்பட்ட அதே கப்பல்களின் அதிகாரமளிப்பு நியமனம் கொடிகள் (Commissioning Pennant) குறிக்கும் Paying off Pennant கொடிகள் கப்பலின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு சம பாகங்களாக பிரித்து கடற்படை பாரம்பரியமாக இரு கப்பல்களின் கடற்படையினர்களுக்கு வழங்குவது இந்த அதிகாரத்திலிருந்து அகற்றும் விழாவின் இறுதி உறுப்பு எனக் குறிக்கப்பட்டது. நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக கடற்படைக்கு பெருமைமிக்க சேவையை வழங்குவதன் மூலம் கடல் மண்டலத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விலைமதிப்பற்ற சேவையை வழங்கிய இந்த இரண்டு கப்பல்களும் அகற்றப்பட்ட பின்னர், எதிர்காலத்தில் திருகோணமலை துறைமுக பகுதியில் ஒரு செயற்கை மீன் வளர்ப்பு நிலத்தை உருவாக்குவதுக்காக நீரில் மூழ்கப்படும்.

கோவிட் - 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட முறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்ட வீரயா மற்றும் ஜகதா கப்பல்கள் அதிகாரத்திலிருந்து அகற்றும் விழாவுக்காக 1981 ஜனவரி 01 முதல் 1981 ஜனவரி 25, வரை அதன் 06 வது கட்டளை அதிகாரியாக பணியாற்றிய ரியர் அட்மிரல் (ஓய்வு) ஜே.டி.ஜி சுந்தரம் மூத்த அதிகாரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் ருவான் பெரேரா, கொடி அதிகாரி கடற்படை கொடி கட்டளை ரியர் அட்மிரல் வய்.எம்.ஜி.பி ஜெயதிலக, கிழக்கு கடற்படை கட்டயின் துனை தளபதி கமடோர் அனுர தனபால, இலங்கை கடற்படை கப்பல் வீரயா கப்பலின் கட்டளை அதிகாரி கமான்டர் ஆர்.பி.சி.ஜே ராஜபக்‌ஷ, இலங்கை கடற்படை கப்பல் ஜகதா கப்பலின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கமாண்டர் கே.எஸ்.ரணசிங்க, கடற்படை தலைமையகம் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் மூத்த அதிகாரிகள், கிழக்கு கடற்படை கட்டளையின் கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரிகள், கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் பயிற்சியின் கீழ் உள்ள அதிகாரிகள் மற்றும் ஏராளமான கடற்படை வீரர்கள் கலந்து கொண்டனர்.