IMDEX ASIA - 2023 கடல்சார், பாதுகாப்பு கண்காட்சி மற்றும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் கடற்படைத் தளபதி கலந்து கொண்டார்

சிங்கப்பூர் சாங்கி கண்காட்சி மையத்தில் 2023 மே 03 முதல் 05 வரை நடைபெற்ற IMDEX ASIA – 2023 கடல்சார், பாதுகாப்பு கண்காட்சி மற்றும் சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாட்டில் (International Maritime Security Conference – IMSC ) வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா பங்கேற்றார்.

IMDEX ASIA, ஆசிய பிராந்தியத்தில் நடைபெறும் ஒரு முன்னணி கடற்படை, கடல்சார் மற்றும் பாதுகாப்பு கண்காட்சியாகும். இந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியின் 13வது தொகுதி மற்றும் அதன் கீழ் நடைபெற்ற சர்வதேச கடல் பாதுகாப்பு மாநாட்டிற்காக, உலகின் பல்வேறு மாநிலங்கள், பிராந்தியங்கள், கடற்படைகள், கடலோர காவல் துறைகள் மற்றும் கடல்சார் சட்ட அமலாக்க முகவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தி ஏராளமான பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன்படி, ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு தொடர்பில் பரஸ்பர புரிந்துணர்வு, ஒத்துழைப்பு மற்றும் திறன்களை மேம்படுத்துவதற்கு பங்குதாரர்களுக்கு இடையில் நடைபெற்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த கலந்துரையாடலில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா கலந்துகொண்டார்.

அங்கு கடற்படைத் தளபதி, அமெரிக்க கடற்படை பதிவு அலுவலகத்தில் சர்வதேச கடற்படை நிகழ்ச்சிகள் அலுவலகத்தின் பணிப்பாளர் ரியர் அட்மிரல் அந்தோணி இ. டோனி ரோஸி (Rear Admiral Anthony E. Tony Rossi- The Director, Navy International Programmes Office, Office of the Secretary of the Navy), ஆஸ்திரேலிய கூட்டு இறையாண்மை எல்லைப் பணிக்குழுவின் தலைவர், ரியர் அட்மிரல் ஜஸ்டின் ஜோன்ஸ் (Rear Admiral Justin Jones), ஆசியாவில் கப்பல்களுக்கு எதிரான கடற்கொள்ளை மற்றும் ஆயுதங்கள் கடத்தல் பற்றிய பிராந்திய ஒத்துழைப்பு ஒப்பந்தத்தின் நிர்வாக இயக்குனர். திரு. கிருஷ்ணசாமி நடராஜன் அவர்கள்(Executive Director RECAAP - ISC) அமெரிக்காவின் பசிபிக் கடற்படை கப்பல்களின் தலைவர், அட்மிரல் சாமுவேல் பாப்பரோ, (Admiral Samuel Paparo),சிங்கப்பூர்க் குடியரசின் கடற்படைத் தளபதி, ரியர் அட்மிரல் சோன் வெட் (Rear Admiral Sean Wat), நியூசிலாந்து கடற்படையின் தளபதி, ரியர் அட்மிரல் டேவிட் ப்ரோக்டர் (Rear Admiral David Proctor) மற்றும் ராயல் ஆஸ்திரேலிய கடற்படையின் தளபதி, வைஸ் அட்மிரல் மார்க் ஹம்மண்ட் (Vice Admiral Mark Hammond), ஆகிய ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள கடற்படை மற்றும் கடல்சார் தலைவர்கள். பாதுகாப்புப் பங்குதாரர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்புகள் மற்றும் இருதரப்பு கலந்துரையாடல்களில்; கடல் பிராந்தியத்தில் பொதுவான பாரம்பரியமற்ற கடல்சார் பாதுகாப்பு சவால்களை கூட்டாக சமாளித்தல், வெற்றிகரமான தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு கடல்சார் பங்குதாரர்களிடையே தேவையான ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் கடல் விண்வெளி பற்றிய விழிப்புணர்வு, செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துதல், கடல்சார் தகவல் பரிமாற்றம் உட்பட, பாதுகாப்பு தொடர்பான பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களில் கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றதுடன், அந்த நிகழ்வுகளைக் குறிக்கும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாற்றப்பட்டன.