கடலில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு கடற்படையின் உதவி

இலங்கை கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்தில் பாதிக்கப்பட்டுள்ள மீன்பிடி மற்றும் கடற்படை சமூகங்களுக்கு நிவாரணம் வழங்கும் பொறுப்பில் உள்ள இலங்கை கடற்படை, கடந்த நாட்களில் மீன்வள மற்றும் நீர்வளத் திணைக்களத்தின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில் வெற்றிகரமான பல மீட்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது.

அதன்படி, கிரிந்த பகுதியில் இருந்து 61 கடல் மைல் (113 கி.மீ) தென்கிழக்கு கடலில் தொழில்நுட்பக் கோளாறு காரணத்தினால் பாதிக்கப்பட்ட ஜெயருவான் I என்ற பல நாள் மீன்பிடிப் படகொன்று ஆறு மீனவர்களுடன் கரைக்கு கொண்டு வர கடற்படை ஆழ்கடல் கண்கானிப்பு கப்பலொன்று அனுப்பியது. அதன் படி 2020 ஆகஸ்ட் 05, அன்று, மீன்பிடிப் படகை கடலில் கரடுமுரடான சூழ்நிலை எதிர்கொண்டு மிகுந்த முயற்சியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்டது..

மேலும், முல்லைதீவுக்கு வடக்கில் 18 கடல் மைல் (சுமார் 33 கி.மீ) தொலைவில், தொழில்நுட்பக் கோளாறு காரணத்தினால் பாதிக்கப்பட்ட ஜனக IV என்ற மீன்பிடிப் படகு 2020 ஆகஸ்ட் 04 அன்று ஆறு (06) மீனவர்களுடன் கரைக்கு கொண்டு வர கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது. இதுக்காக கடற்படையின் துரித தாக்குதல் படகொண்று அனுப்பப்பட்டன./p>

மேலும், ஆகஸ்ட் 02 ஆம் திகதி, காலிக்கு தென்கிழக்கில் 50 கடல் மைல் (92 கி.மீ) தொலைவில், யசிரு புதா என்ற படகில் நோயுற்ற ஒரு மீனவரை மோசமான வானிலை மத்தியில் காலி துறைமுகத்திற்கு அழைத்து வர கடற்படை நடவடிக்கைகள் எடுத்துள்ளது. தேவையான மருத்துவ உதவியுடன் கரைக்கு கொண்டு வரப்பட்ட நோயாளி மேலதிக சிகிச்சைக்காக கராபிட்டிய போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும், சர்வதேச மரபுகளின்படி கடலில் உயிர் பாதுகாப்புக்கான தனது பொறுப்பை நிறைவேற்றுகின்ற கடற்படை இலங்கையின் கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்தில் பாதிக்கப்பட்ட மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்திற்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி வருகிறது.