சட்டவிரோதமாக இந்நாட்டிற்கு கொண்டு வர முட்பட்ட பீடி இலைகள் கடற்படையினரால் கைது

இன்று (2020 செப்டம்பர் 05) மாரவில கடற்கரையில் நடத்தப்பட்ட சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, கடல் வழியாக நாட்டிற்கு கடத்த முயன்ற சுமார் 506 கிலோகிராம் பீடி இலைகளுடன் 06 சந்தேக நபர்களை கடற்படை கைது செய்தது.

மேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மாரவில கடற்கரையில் நடத்திய சிறப்பு நடவடிக்கையின் போது, இலங்கைக்கு டிங்கி படகு மூலம் கொண்டு வரப்பட்ட 16 சாக்குகளில் அடங்கிய சுமார் 506 கிலோகிராம் பீடி இலைகள் கடற்கரைக்கு இறக்கும் போது இரண்டு (02) சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர். அப்போது குறித்த பீடி இலைகளை எடுத்துச் செல்ல கடற்கரைக்கு வந்த நான்கு (04) வாங்குபவர்களுடன் ஒரு லாரியையும் கடற்படை கைப்பற்றியது.

குறைந்த வருமானம் கொண்ட கிராமப்புற மற்றும் நகர்ப்புற சமூகத்தினரிடையே மற்றும் இலங்கையில் புகைபிடிக்கும் மீன்பிடி சமூகத்தினரிடையே பீடி தயாரிப்புகளுக்கான தேவை உள்ளதுடன் இலங்கையின் பல மாவட்டங்களில் பீடி இலைகள் மற்றும் புகையிலைகளைப் பயன்படுத்தி பீடி சுற்றும் தொழில் நடைமுறையில் உள்ளது. எந்தவொரு சுகாதாரமான தரமும் இல்லாத இந்த தயாரிப்புகளை ஊக்கப்படுத்த அவ்வப்போது எடுக்கப்பட்ட கொள்கை முடிவுகளின் விளைவாக, மோசடி செய்பவர்கள் அவற்றை சட்டவிரோத வழிமுறைகள் மூலம் இலங்கைக்கு கடத்த முயற்சிக்கின்றனர். இந்த தயாரிப்புகள் குறைந்த வருமானம் கொண்ட கிராமப்புற மற்றும் நகர்ப்புற சமூகம் மற்றும் மீன்பிடி சமூகத்தினரிடையே பிரபலமாக இருந்தாலும், பீடி பொருட்களின் பயன்பாடு மிகவும் ஆரோக்கியமற்றது.

இவ்வாரு கைது செய்யப்பட்ட நபர்கள் 18 முதல் 50 வயதுக்குட்பட்ட பேசாலே, பன்னல மற்றும் எலுவன்குளம பகுதிகளில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். தற்போதைய COVID-19 தொற்று சூழ்நிலையின் கீழ் சுகாதாரத் துறை வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, குற்றம் சாட்டப்பட்டவர்கள், பீடி இலைகள், டிங்கி மற்றும் லாரி ஆகியவற்றை மாரவில பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.