வடக்கு கடலில் இருந்து கேரள கஞ்சா பொதி யொன்று கடற்படை கைப்பற்றியது

இலங்கை கடற்படை மற்றும் கடலோர காவல்படை இணைந்து 2020 அக்டோபர் 11 ஆம் திகதி யாழ்ப்பாணம், மாதகல்துரை கடல் பகுதியில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் போது 111 கிலோகிராமுக்கு மேற்பட்ட கஞ்சாவை கைப்பற்றியது.

சர்வதேச கடல் எல்லைக் கோட்டிலிருந்து கரைக்குச் செல்லும் சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று கண்கானித்த வடக்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் மற்றும் இலங்கை கடலோர காவல்படையின் வீரர்கள் குறித்த சந்தேகத்திற்கிடமான டிங்கி படகை சோதனை செய்ய தயாரான போது குறித்த டிங்கி படகில் இருந்த நபர்கள் பல பொதிகள் கடலில் எறிந்து தப்பி சென்றனர். இதனையடுத்து, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகுப் பின் துரத்திய கடற்படையினர் குறித்த படகு மாதகல்துரை கடற்கரையில் கைவிடப்பட்டு இருந்த போது கண்டுபிடித்தனர். மேலும், கடல் பகுதியில் மேற்கொண்ட தேடலின் போது, மிதக்கும் 05 பொதிகளில் 111 கிலோ மற்றும் 550 கிராம் கேரள கஞ்சாவை கடற்படை பறிமுதல் செய்தது.

கடற்படை நடவடிக்கைகள் காரணமாக கேரள கஞ்சாவை கரைக்கு கொண்டு வர முடியாததால் சந்தேக நபர்கள் கேரள கஞ்சா பொதிகளை கடலில் எறிந்து டிங்கியை கைவிட்டு தப்பி ஓடிவிட்டதாக சந்தேகிக்கப்படுகிறது இதற்கிடையில், சந்தேக நபர்களைத் தேடி கடற்படை மற்றும் இளவலைபொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நடவடிக்கையின் போது கடற்படையால் கைது செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் கோவிட் -19 பரவாமல் தடுப்பதற்காக வழங்கப்பட்ட அனைத்து சுகாதாரமான நடைமுறைகளையும் பின்பற்றி முற்றிலும் கிருமி நீக்கம் செய்யப்பட்டன. மேலும், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகு மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் இளவாலே பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.