சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகளுடன் 40 நபர்கள் கடற்படையினரால் கைது

கடந்த சில நாட்களில் வடமத்திய மற்றும் வடமேற்கு கடற்படை கட்டளைகள் மையமாக கொண்டு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது, சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுமார் 2186 கடல் அட்டைகளுடன் 40 சந்தேக நபர்களை கடற்படை கைது செய்தது.

அக்டோபர் 31 முதல் நவம்பர் 03 வரையிலான காலகட்டத்தில் வலைபாடு லொக்கண்ணவடி கடற்கரையில், நச்சிகுடா மற்றும் மன்னார் கொந்தம்பிட்டி ஆகிய பகுதிகளில் வட மத்திய கடற்படை கட்டளை நடத்திய தேடுதல் நடவடிக்கைகளின் போது, 05 மீன்பிடி படகுகளில் இருந்து 1544 கடல் அட்டைகள் கைப்பற்றப்பட்டன. அங்கு கடல் அட்டைகள் மற்றும் 05 மீன்பிடி படகுகளுடன் 21 நபர்கள், பல சுழியோடி உபகரணங்கள் மற்றும் பல மீன்பிடி பொருட்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டன.

மேலும், வட மத்திய கடற்படை கட்டளையின் கடற்படையினர் இலுப்புகடவாய் பொலிஸாருடன் இணைந்து நவம்பர் 01 ஆம் திகதி தெவம்பிட்டி பகுதியில் மேற்கொண்டுள்ள மற்றொரு தேடுடல் நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான வீட்டொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அங்கு சட்டவிரோதமாக பிடித்து வேகவைத்த 63 கடல் அட்டைகளுடன் ஒரு சந்தெகநபர் கைது செய்யப்பட்டார்.

மேலும், வடமேற்கு கடற்படை கட்டளையின் கடற்படையினர் 2020 நவம்பர் 4 மற்றும் 5 ஆம் திகதிகளில் அரிப்பு கிழக்கு கடற்கரையிலும் கொண்டச்சிகுடா பகுதியில் இருந்து அரிப்பு வரைலான கடல் பகுதியிலும் மேற்கொண்டுள்ள தேடுதல் நடவடிக்கையின் போது சட்டவிரோதமாக கடல் அட்டைகளைப் பிடித்த 19 நபர்களுடன் 642 கடல் அட்டைகள் கைப்பற்றியது. அங்கு 04 டிங்கி படகுகள், பல சுழியோடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடிபோருட்கள் ஆகியவற்றைக் கைப்பற்றப்பட்டது.

மேலும், கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி கைது செய்யப்பட்ட இந்த நபர்கள் மன்னார் வலைபாடு, யாழ்ப்பானம், நச்சிகுடா மற்றும் அறிப்பு பகுதிகளில் வசிக்கும் 19 முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட கடல் அட்டைகள், மீன்பிடி படகுகள் மற்றும் சுழியோடி உபகரனங்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் மீன்வளத்துறை உதவி இயக்குநரிடம், ஜெய்புரம் மற்றும் இலுப்புகடவாய் காவல் நிலையங்களில், கிலினொச்சி மற்றும் சிலாவத்துர மீன்வள ஆய்வாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.