கடலில் தீப்பிடித்த மீன்பிடிப் படகையும் படகில் இருந்த மீனவர்களையும் கடற்படையால் பாதுகாப்பாக மீட்பு

தெற்கு கடல் பகுதியில் பல நாள் மீன்பிடிப் படகொன்றில் ஏற்பட்ட தீயை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய கடற்படையினர் இன்று (2020 நவம்பர் 07) குறித்த மீன்பிடி படகு மற்றும் அதன் குழுவினரை பாதுகாப்பாக காலி துறைமுகத்திற்கு அழத்து வந்தனர்.

அம்பலங்கொடை மீன்பிடித் துறைமுகத்தை விட்டு வெளியேறிய ‘ஜனத் I’ (IMUL-A-0545-GLE) என்ற பல நாள் மீன்பிடி படகு கரைக்குத் திரும்பிக்கொண்டிருந்தபோது, கொக்கலை கடல் பகுதியில் அதன் இயந்திர அறையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது இப்பகுதியில் ரோந்துப் பணியில் இருந்த தெற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட ஒரு கடலோர கண்கானிப்பு ரோந்து படகு பல நாள் மீன்பிடி படகில் ஏற்பட்ட தீ விபத்தை அவதானித்தது அதன்படி, கடலோர கண்கானிப்பு ரோந்து படகு பல நாள் மீன்பிடி படகில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதுடன் மேலும், தீயை அணைக்கும் நடவடிக்கைகளை அதிகரிக்க காலி துறைமுகத்திலிருந்து ஒரு துரித தாக்குதல் படகொன்றும் அனுப்பப்பட்டது.

அதன்படி, துரித தாக்குதல் படகு மற்றும் கடலோர பாதுகாப்பு படகு ஆகியவற்றின் கடற்படை வீரர்களினால் இந்த தீயை வெற்றிகரமாக அணைக்க முடிந்தது. மேலும், இந்த சம்பவத்தில் பல நாள் மீன்பிடி படகில் இருந்த எந்த மீனவரும் காயமடையவில்லை மேலும், படகில் குழுவினரும் படகும் கடற்படை மூலம் காலி மீன்பிடி துறைமுகத்திற்கு பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டன.

மேலும், கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி இந்த நடவடிக்கைகள் கடற்படையால் மேற்கொள்ளப்பட்டதுடன் இலங்கைக்கு சொந்தமான கடல்சார் தேடல் மற்றும் மீட்பு மண்டலத்தில் பாதிக்கப்படும் கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு கடற்படை தொடர்ந்து நிவாரணம் வழங்கும். மேலும் எதிர்காலத்தில் இதுபோன்ற எந்தவொரு அவசரநிலைகளுக்கும் பதிலளிக்க கடற்படை தயாராக உள்ளது.