கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற உலர்ந்த மஞ்சள் மற்றும் ஏலக்காய் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

வடமேற்கு கடல் பகுதியில் 2021 ஜனவரி 05 அன்று கடற்படை நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 1680 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் சுமார் 150 கிலோ கிராம் ஏலக்காய் ஆகியவையுடன் இந்திய படகொன்று (Dhow) மற்றும் நாங்கு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர்.

வடமேற்கு கடற்படைக் கட்டளையின் கடற்படையினர் குதிரை முனைக்கு வடக்கில் இலங்கைக்கு சொந்தமான கடற்பரப்பில் கடலோரப் படகுகளைப் பயன்படுத்தி நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான இந்திய படகொன்று (Dhow) பயணம் செய்வதைக் கண்கானித்தனர். அதன் பின் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த 57 சாக்குகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 1680 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 05 சாக்குகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 150 கிலோ ஏலக்காய் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டதுடன் குறித்த பொருட்களுடன் படகில் இருந்த நாங்கு இந்தியர்கள் கைது செய்யப்பட்டனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட உலர்ந்த மஞ்சள் மற்றும் ஏலக்காய் கடலில் இலங்கை கப்பலுக்கு மாற்ற கடத்தல்காரர்கள் திட்டமிட்டிருந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி குதிரை முனைக்கு வடக்கு கடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட இந்திய நபர்கள், உலர்ந்த மஞ்சள் மற்றும் ஏலக்காய் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க சுங்க தடுப்பு அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதற்கிடையில், இந்திய படகு மேலதிக விசாரணைகளுக்காக கடற்படையின் காவலில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை கடல் பகுதியில் நடக்கும் அனைத்து சட்டவிரோத நடவடிக்கைகளையும் கட்டுப்படுத்த கடற்படை தொடர்ந்து விழிப்புடன் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.