சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற மஞ்சள் மற்றும் ஏலக்காயுடன் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

தலைமன்னார் கடல் பகுதியில் 2021 மார்ச் 15 ஆம் திகதி கடற்படை நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 349 கிலோ கிராம் மஞ்சள் மற்றும் சுமார் 156 கிலோ கிராம் ஏலக்காய் ஆகியவையுடன் 02 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கடல் வழியாக மேற்கொள்ளப்படுகின்ற சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதற்காக கடற்படை பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் படி வட மத்திய கடற்படைக் கட்டளையின் கடற்படையினர் நடத்திய சிறப்புத் தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்று சோதனை செய்யப்பட்டதுடன் அங்கு 14 சாக்குகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 349 கிலோ கிராம் மஞ்சள் (ஈரமான எடை) மற்றும் 06 சாக்குகளில் பொதி செய்யப்பட்ட சுமார் 156 கிலோ ஏலக்காய் (ஈரமான எடை) கண்டுபிடிக்கப்பட்டது. குறித்த பொருட்களுடன் டிங்கி படகு மற்றும் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கோவிட் 19 பரவுவதைத் தடுக்க வழங்கப்பட்ட சுகாதார அறிவுறுத்தல்கள் மற்றும் நடைமுறைகளைப் பின்பற்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பேசாலை பகுதியில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டனர். அவர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்காக தலைமன்னார் பொது சுகாதார ஆய்வாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மஞ்சள் மற்றும் ஏலக்காய் மேலதிக விசாரணைகளுக்காக யாழ்ப்பாணம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.