திக்கோவிட்ட துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த மீன்பிடிப் படகில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்தப்பட்டது

திக்கோவிட்ட, மீன்வள துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த பல நாள் மீன்பிடிப் படகில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினை கட்டுப்டுத்த 2021 மார்ச் 29 ஆம் திகதி கடற்படை தீயணைப்பு படையணி நடவடிக்கைகள் எடுத்துள்ளது.

அதன் படி, இன்று (2021 மார்ச் 29) மாலை திக்கோவிட்ட, மீன்வள துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த லங்கா மாதா (IMUL-A 0691- CHW) என்ற பல நாள் மீன்பிடிப் படகில் ஏற்பட்ட தீ விபத்தினை பற்றி திக்கோவிட கடலோர காவல்படை பிரிவினால் மேற்கு கடற்படை கட்டளையின் செயல்பாட்டு அறைக்கு தகவல்களை வழங்கிய பின் இரண்டு கடற்படை தீயணைப்பு படை குழுகள் மற்றும் இரண்டு கடற்படை தீயணைப்பு வண்டிகள் உடனடியாக டிக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டன. அங்கு கொழும்பு நகராட்சி கவுன்சில் தீயணைப்பு சேவைத் துறை, கடலோர காவல்படை நிலையத்தின் ஊழியர்கள் மற்றும் டிக்கோவிட்ட மீன்வளத் துறைமுகத்தைச் சேர்ந்தவர்கள் ஆகியோரின் ஒருங்கிணைந்த முயற்சியின் தீ விபத்தினை கட்டுப்படுத்தி அருகிலுள்ள படகுகளுக்கு பரவுவதைத் தடுக்க முடிந்தது.

மேலும், குறித்த தீ விபத்தால் காயமடைந்த 07 நபர்களும் டிக்கோவிட்ட கடலோர காவல்படை நிலையத்தின் உதவியுடன் சிகிச்சைக்காக வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.